விஜய் தேவரகொண்டாவுடன் நடந்த நிச்சயதார்த்தம் - என்கேஜ்மென்ட் ரிங் பற்றி பேசிய ராஷ்மிகா!

Published : Nov 05, 2025, 06:19 PM IST

Rashmika Reveals the Truth About Her Engagement Ring: நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு, கடந்த மாதம் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில், இவரது நிச்சயதார்த்த மோதிரத்தின் புகைப்படம் வைரலாகி வருகிறது.

PREV
15
நேஷனல் கிரஷ்:

மிக குறுகிய காலத்தில், தென்னிந்திய ரசிகர்கள் முதல் பாலிவுட் ரசிகர்கள் வரை கவர்ந்து, நேஷனல் கிரஷ் என பெயரெடுத்தவர் ராஷ்மிகா மந்தனா. கன்னடத்தில் வெளியான 'கிரிக் பார்ட்டி' திரைப்படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர். இவர் இந்த படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த, ரக்ஷித் ஷெட்டியை காதலிக்க துவங்கினார். இவர்களின் காதல் நிச்சயதார்த்தம் வரை சென்றது. நிச்சயதார்த்தம் முடிந்த பின்னர் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக திருமணத்தை நிறுத்தினர்.

25
விஜய் தேவரகொண்டாவுடன் காதல்:

இதை தொடர்ந்து, திரைப்படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்த துவங்கினார் ராஷ்மிகா. தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் நடித்த, கீதா கோவிந்தம் திரைப்படத்தில் ராஷ்மிகா நடித்தபோது... இருவருக்கும் ஏற்பட்ட நெருக்கம் பின்னர் காதலாக மாறியது. இதன்பின்னர் இருவரும் 'காம்ரேட்' திரைப்படத்தில் இணைந்து நடித்தனர்.

35
மறைமுகமாக காதலை அறிவித்த ராஷ்மிகா:

கடந்த 5-வருடத்திற்கு மேலாகவே இருவரும் டேட்டிங் செய்து வந்த நிலையில், பல இடங்களில் ஜோடியாக சென்று சிக்கி உள்ளனர். சில மேடைகளில் விஜய் தேவரைகொண்டாவை காதலிப்பதை மறைமுகமாக உறுதி செய்த ராஷ்மிகா... தீபாவளியை கூட காதலர் வீட்டில் தான் கொண்டாடி மகிழ்ந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் தான் கடந்த மாதம் , ராஷ்மிகா மந்தனா, விஜய் தேவரகொண்டா நிச்சயதார்த்தம் எளிமையான முறையில் ஹைதராபாத்தில் நடந்து முடிந்ததாக கூறப்பட்டது.

45
ராஷ்மிகா - விஜய் தேவரைக்கொண்ட நிச்சயதார்த்தம்:

ஒருமுறை விமான நிலையத்தில் காரில் இருந்து இறங்கிய ராஷ்மிகா மந்தனா, கேமராக்களுக்கு கையசைத்து, புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்த போது... ராஷ்மிகாவின் விரலில் இருந்த மோதிரம் கேமராவில் பதிவானது. இது நிச்சயதார்த்த மோதிரமாக இருக்க கூடும் என செய்திகளும் உலா வர துவங்கின. தற்போது, ராஷ்மிகா... தன்னுடைய கையில் இருக்கும் அந்த மோதிரம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

55
மோதிரம் பற்றி பேசிய ராஷ்மிகா:

தெலுங்கில் நடிகர் ஜெகபதி பாபு தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ராஷ்மிகாவிடம், ஜெகபதி பாபு அவருடைய கையில் இருக்கும் ரிங் பற்றி கேள்வி எழுப்ப, வெக்க புன்னகையோடு அது மிகவும் முக்கியமான ரிங் என்று கூறியுள்ளார். இதன் மூலம் அந்த மோதிரம் நிச்சயதார்த்த மோதிரம் தான் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories