நடிகர் விஜய் தேவரகொண்டாவை அடுத்த ஆண்டு திருமணம் செய்துகொள்ள உள்ள நடிகை ராஷ்மிகா மந்தனா, அவருடனான முத்தக்காட்சி பற்றி பேட்டி ஒன்றில் ஓப்பனாக பேசி இருக்கிறார்.
நடிகை ராஷ்மிகா மந்தனா நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டபோது சினிமாவில் தன்னுடைய முதல் முத்தம் பற்றி பேசி இருக்கிறார். அதில் அவர் கூறியதாவது : 'என் சினிமா வாழ்க்கையில் நான் கொடுத்த முதல் முத்தம் 'கீதா கோவிந்தம்' படத்தில் தான். அது படத்திற்குத் தேவை, சக நடிகருக்கு முத்தம் கொடுக்க வேண்டும் என்றபோது இயல்பாகவே என் மனதில் குழப்பம் ஏற்பட்டது. அதேபோல, சக நடிகர் விஜய்க்கும் இருந்ததாகப் பிறகு தெரிந்துகொண்டேன்.
24
முதல் முத்தம் பற்றி ராஷ்மிகா மந்தனா கூறியது என்ன?
ஆனால், நாங்கள் கலைஞர்களாக படத்துக்குத் தேவையான அனைத்து காட்சிகளிலும் பங்களிப்பை அளிக்க வேண்டும். அது எங்கள் தொழில்முறைக்கும், சினிமா மீதான அர்ப்பணிப்புக்கும் அவசியம். கதைக்குத் தேவைப்படும்போது முத்தக் காட்சியை ஏற்று நடிப்பது நடிப்பின் ஒரு பகுதிதான். கதைக்குத் தேவைப்பட்டால் மட்டுமே இயக்குநர்கள் அத்தகைய காட்சிகளைப் படமாக்குவார்கள். அதிலும், கீதா கோவிந்தம் படத்தில் நானும் விஜய் தேவரகொண்டாவும் நடித்தது திருமணமான தம்பதிகளும். திருமணமான கணவன்-மனைவி செய்யும் அனைத்தையும் நாங்கள் சினிமாவில் செய்ய வேண்டும், அது இயல்பு.
34
200 பேர் முன்னிலையில் முத்தம் கொடுத்த ராஷ்மிகா
ஆனால், கீதா கோவிந்தம் படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் முத்தக்காட்சி எடுத்தபோது நான் மிகவும் பதட்டமாக இருந்தேன். ஏனென்றால், என்னைப் பொறுத்தவரை முத்தம் என்பது மிகவும் தனிப்பட்ட மற்றும் உணர்வுப்பூர்வமான விஷயம். அதனால் இயல்பாகவே எனக்கு மிகவும் கவலை ஏற்பட்டது. அதிலும் படப்பிடிப்பில் அந்த இடத்தில் 200க்கும் மேற்பட்டோர் இருப்பார்கள். அவர்கள் முன்னிலையில் முத்தம் கொடுப்பது மிகவும் கடினமாக இருந்தது என்பது பொய்யல்ல' என்று கூறியுள்ளார் நடிகை ராஷ்மிகா மந்தனா.
ஆச்சரியம் என்னவென்றால், நடிகை ராஷ்மிகா முதன்முதலில் திரையில் முத்தமிட்ட நபருடனேயே இப்போது அவரது நிச்சயதார்த்தம் மற்றும் திருமணம் உறுதியாகியுள்ளது. 26 பிப்ரவரி 2026-ல் ராஷ்மிகா மந்தனா-விஜய் தேவரகொண்டா திருமணம் உதய்பூரில் நடக்கவுள்ளது. 'கீதா கோவிந்தம்' படத்தில் சினிமாவுக்காக முதல் முத்தம் கொடுத்த நடிகை ராஷ்மிகா மந்தனா, அதன்பிறகு அனிமல் படத்தில் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருடன் முத்தக் காட்சியில் நடித்திருந்தார். விஜய் தேவரகொண்டாவும் தனது அர்ஜுன் ரெட்டி படத்தில் சக நடிகையுடன் லிப்-லாக் காட்சியில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.