Rashmika dropped from Pan India Movie : ராஷ்மிகா மந்தனா தொடர்ந்து சூப்பர் ஹிட் திரைப்படங்களைக் கொடுத்து பான் இந்தியாவின் சக்சஸ்புல் நாயகியாக வலம் வந்தார். அனிமல், புஷ்பா 2, சாவா ஆகிய படங்கள் ராஷ்மிகா வாழ்க்கையில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. ஆனால் இதன் தொடர்ச்சியாக அவர் சல்மான் கானுடன் நடித்த சிக்கந்தர் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
சிக்கந்தர் திரைப்படத்தின் தோல்வியால் ராஷ்மிகா தற்போது பின்னடைவை சந்தித்துள்ளாராம். பிரபாஸின் அடுத்த திரைப்படத்திலிருந்து ராஷ்மிகா மந்தனா நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.