விஜய் டிவியில் ஒளிபரப்பான, லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமான லொள்ளு சபா ஆண்டனி உடல்நலக் குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில், உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விஜய் டிவி ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சி மூலம்... பல நடிகர்களை வெள்ளித்திரைக்கு கொடுத்துள்ளது. அந்த வகையில் லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் தங்களின் திறமையை வெளிப்படுத்தி இன்று கோடி கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகர்களாக உள்ளவர்கள் தான், நடிகர் சந்தானம் மற்றும் யோகி பாபு ஆகியோர். இவர்கள் இருவருமே காமெடி நடிகராக திரையுலகின் உள்ளே நுழைந்தாலும் தற்போது கதையின் நாயகனான நடித்து வருகிறார்கள்.
24
Sheshu Death:
சேஷு கடந்த ஆண்டு உயிரிழந்தார்:
இந்த நிகழ்ச்சி மூலம் சுவாமிநாதன், மனோகர், ஜீவா, மாறன், பழனியப்பன், ஆகியோர் அடுத்தடுத்து சில வாய்ப்புகளை கைப்பற்றி தற்போது நடித்து வருகிறார்கள். மேலும் வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் தன்னுடைய திறமையான நடிப்பால், பலரையும் கவர்ந்த சேஷு கடந்த ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
34
Lollu Sabha Antony:
லொள்ளு சபா ஆண்டனி:
இவரை தொடர்ந்து, இந்த ஆண்டு மற்றொமொரு லொள்ளுசபா பிரபலம் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதாவது கடந்த இரண்டு வருடத்திற்கும் மேலாக ஆஸ்துமா மற்றும் பல்வேறு பிரச்சனையால் அவதிப்பட்டு வந்ததாக கூறி வரும், லொள்ளு சபா ஆண்டனி உயிரிழந்துள்ளார். இவர் சந்தானத்தின் நெருங்கிய நண்பரும் ஆவார். இவருடைய மருத்துவ செலவுகளை சந்தானம் ஏற்று கொண்டதாக கடந்த ஆண்டு தனியார் யூ டியூப் தளத்திற்கு கொடுத்த பேட்டியில் கூறி இருந்தார்.
44
Santhanam Friend Lollu Sabha Antony
ஆண்டனி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம்:
மேலும் பட வாய்ப்புகள் கிடைத்த போதும்... கையில் பணம் இருக்கும் ஜோரில், சந்தானத்தின் பேச்சை கேட்காமல் சில தவறான நட்புகளுடன் ஏற்பட்ட பழக்கம் தான் தன்னுடைய இந்த நிலைக்கு காரணம் என கூறினார்.
ஆரம்பத்தில் ஆஸ்துமா இருந்தது இவருக்கு கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், பின்னர் நுரையீரலில் தண்ணீர் இருப்பதாக கூறி அதை வெளியேற்றி உள்ளனர். நுரையீரல் பாதிப்பு ஏற்பட்ட பின்னர் , காலில் வெரிகோஸ் நோய் வந்தது. அடுத்தடுத்து பல உடல்நல பாதிப்புகளை எதிர்கொண்டுவந்த லொள்ளுசபா ஆண்டனி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் தற்போது அவரது நெருங்கிய வட்டாரத்தை சேர்ந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சந்தானம் உள்ளிட்ட பலர் நேரடியாக சென்று இவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. ரசிகர்களும் சமூக வலைத்தளம் மூலம் இவருக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.