கூடவே இருந்து ரூ.80 லட்சம் அபேஸ் பண்ணிய மேனஜர்... விஷயம் தெரிஞ்சதும் நடிகை ராஷ்மிகா எடுத்த அதிரடி நடவடிக்கை

First Published | Jun 19, 2023, 2:44 PM IST

ராஷ்மிகா மந்தனாவின் மேஜேனர் அவரிடம் இருந்து ரூ.80 லட்சம் மோசடி செய்த சம்பவம் திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Rashmika Mandanna

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரை பேமஸ் ஆக்கியது தெலுங்கு படங்கள் தான். தெலுங்கில் நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக இவர் நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய திரைப்படங்கள் ராஷ்மிகாவுக்கு நேஷனல் கிரஷ் என்கிற பட்டத்தையும் பெற்றுத்தந்தது. அந்த அளவுக்கு இளம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துவிட்டார் ராஷ்மிகா.

Rashmika Mandanna

நடிகை ராஷ்மிகா நடிப்பில் தற்போது அனிமல் என்கிற இந்தி படம் தயாராகி வருகிறது. இதில் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக நடித்துள்ளார் ராஷ்மிகா. இப்படத்தை அர்ஜுன் ரெட்டி படத்தின் இயக்குனர் சந்தீப் வங்கா இயக்கி உள்ளார். அனிமல் திரைப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகின்றது. இப்படத்தை வருகிற ஆகஸ்ட் மாதம் திரைக்கு கொண்டுவர உள்ளன. இதனை பான் இந்தியா படமாக ரிலீஸ் செய்ய உள்ளனர்.

இதையும் படியுங்கள்... அஜித், விஜய் முதல் நயன்தாரா வரை... நடிப்பை போல் பிசினஸிலும் கோடி கோடியாய் சம்பாதிக்கும் சினிமா நட்சத்திரங்கள்


Rashmika Mandanna

இதுதவிர தெலுங்கில் சுகுமார் இயக்கத்தில் உருவாகும் புஷ்பா 2 திரைப்படத்தில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் ராஷ்மிகா. அதேபோல் தமிழில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் ரெயின்போ என்கிற திரைப்படத்திலும் கதையின் நாயகியாக நடிக்கிறார் ராஷ்மிகா. இப்படத்தில் ராஷ்மிகாவுக்கு ஜோடியாக சமந்தாவுடன் சாகுந்தலம் படத்தில் நடித்த மலையாள நடிகர் தேவ் மோகன் நடிக்கிறார்.

Rashmika Mandanna

இப்படி பான் இந்தியா அளவில் பிசியான நடிகையாக வலம் வரும் ராஷ்மிகாவிடம் அவரது மேனேஜர் மோசடி செய்துள்ள சம்பவம் திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி ரூ.80 லட்சம் மோசடி செய்த அந்த மேனஜரை உடனடியாக வேலையில் இருந்து நீக்கிவிட்டாராம் ராஷ்மிகா. அந்த நபர் ராஷ்மிகா, சினிமாவில் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து அவருக்கு மேனேஜராக பணியாற்றி வந்தாராம்.

இதையும் படியுங்கள்... 1500 படங்களுக்கு மேல் பணியாற்றிய பிரபல நடன இயக்குனர் திடீர் மரணம் - திரையுலகினர் அதிர்ச்சி

Latest Videos

click me!