நான் அவன் இல்லை.. நிர்வாண போட்டோஷூட் விவகாரத்தில் அந்தர் பல்டி அடித்த ரன்வீர் சிங் - இது உலகமகா நடிப்புடா சாமி

First Published | Sep 16, 2022, 11:22 AM IST

ranveer singh : நிர்வாண போட்டோஷூட் விவகாரம் தொடர்பாக போலீஸ் விசாரணைக்கு ஆஜரான ரன்வீர் சிங், அந்த புகைப்படங்களில் இருப்பது நான் இல்லை என கூறி அதிர்ச்சியளித்துள்ளார்.

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரன்வீர் சிங், இவர் கடந்த ஜூலை மாதம் நிர்வாணமாக போட்டோஷூட் நடத்தினார். ஆங்கில நாளிதழுக்காக அவர் நடத்திய இந்த போட்டோஷூட்டின் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் காட்டுத் தீ போல் பரவியது. அவரின் இந்த நிர்வாண போட்டோஷூட்டுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதையடுத்து சமூக ஆர்வலர் ஒருவர் மும்பையில் உள்ள செம்பூர் காவல்நிலையத்தில் ரன்வீர் சிங்கிற்கு எதிராக புகார் கொடுத்தார். அவரின் நிர்வாண போட்டோஷூட் பெண்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக இருப்பதால் அவரின் மீது நடவடிக்கை எடுக்குமாறு அந்த புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதையும் படியுங்கள்... 54 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாத எஸ்.ஜே.சூர்யா..! ஏன்... முதல் முறையாக போட்டுடைத்த உண்மை!

Tap to resize

இதையடுத்து ரன்வீர் சிங் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என போலீஸார் உத்தரவிட்டிருந்தனர். இதையடுத்து விசாரணைக்கு ஆஜரான ரன்வீர் சிங்கிடம் இந்த போட்டோஷூட்டின் பின்னணி என்ன என்பது குறித்து அடுக்கடுக்கான விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அவரிடம் சுமார் 2 மணிநேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தப்பட்டு, அதில் அவர் அளித்த வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டது.

அந்த விசாரணையில் ரன்வீர் சிங் போலீஸிடம் என்ன சொன்னார் என்கிற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி அந்த போட்டோக்களில் நிர்வாணமாக இருப்பது தான் இல்லை என்றும் அந்த போட்டோஸ் அனைத்தையும் யாரோ மார்ஃபிங் செய்து வெளியிட்டுள்ளனர் எனவும் கூறி அதிர்ச்சி அளித்துள்ளார். அந்த புகைப்படங்களில் இருப்பது அவர் தான் என தெரிந்தும் போலீஸ் விசாரணையில் இப்படி அந்தர் பல்டி அடித்துள்ள ரன்வீரை பார்த்து, இது உலக மகா நடிப்புடா சாமி என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... சிம்புவுக்கு காதல் திருமணம்... ரஜினி தான் அவரின் மாமனார் - கொளுத்திபோட்ட பிரபல நடிகை

Latest Videos

click me!