சிவப்பு சேலையில்... ராஜமாதா ரேஞ்சுக்கு போஸ் கொடுத்த ரம்யா பாண்டியன்..! அழகில் மிளிரும் லேட்டஸ்ட் போட்டோஸ்!

First Published | Feb 16, 2021, 3:20 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர், அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடிக்க தயாராகி வரும் ரம்யா பாண்டியன் அவ்வப்போது, விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் கண்களுக்கு விருந்து படைத்து வருகிறார். அந்த வகையில் சிவப்பு நிற சேலையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை அள்ளி வருகிறது.
 

ramya pandian latest red color saree photos goes viral
தன்னுடைய அழகை மறைத்து... கதைக்கு முக்கியத்தும் கொடுத்து எடுக்கப்பட்ட 'ஜோக்கர்' படத்தின் மூலமாக வெள்ளித்திரையில் தன்னுடைய நடிப்பு பயணத்தை துவங்கியவர் ரம்யா பாண்டியன்.
முதல் படத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

இந்த படத்தை தொடர்ந்து இவர் நடிப்பில் ஆண் தேவதை படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்து ஆச்சர்யப்படுத்தினார்.
தொடர்ந்து இதே போன்ற கதைக்களம் அமைந்ததால், இந்த இமேஜை மாற்ற இளம் ரசிகர்களை கிளுகிளுப்பாக்கும் வகையில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட துவங்கினார்.
அதிலும், மெல்லிய சேலையில் ரம்யா பாண்டியன் இடுப்பு மடிப்பை காட்டியபடி வெளியிட்ட புகைப்படம் பட்டி தொட்டி வரை இவரை திரும்பி பார்க்க வைத்தது.
இவர் காட்டிய கவர்ச்சிக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும், விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பை பெற்றார்.
இதை தொடர்ந்து, பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக அடியெடுத்து வைத்து... இறுதி வரை வந்தும், கடைசியாக இருந்த 5 போட்டியாளர்களின் 4 ஆவது போட்டியாளராக வெளியேறினார்.
தற்போது சூர்யா தயாரிக்க உள்ள படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடிக்க கமிட் ஆகியுள்ளார். இன்னும் சில படங்களிலும் இவரை நடிக்க வைக்க பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
மேலும் அவ்வப்போது, இளம் ரசிகர்களின் நெஞ்சங்களை அள்ளும் விதத்தில் விதவிதமாக போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில் சிவப்பு நிற சேலையில் ராஜ மாதா சிவகாமி தேவிக்கே டஃப் கொடுக்கும் விதமாக இவர் வெளியிட்டுள்ள தற்போதைய புகைப்படங்கள் ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
சிவப்பு சேலையில் மெருகேறி அழகில் இவர் கொடுத்த இந்த போஸ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
ரசிகர்களும் ஆஹா... ஓஹோ... என ரம்யாவை புகழ்ந்து லைக்குகளை குவித்து வருகிறார்கள்.

Latest Videos

click me!