சமீப காலமாக தமிழகத்தை சேர்ந்த பல நடிகைகள் திரையுலகில் காலடி எடுத்து வைத்து, வெற்றி கொடியை நாட்டி வருகின்றனர். அந்த வகையில், திருநெல்வேலியைச் சேர்ந்த ரம்யா பாண்டியன்... நடிப்பாலும், அழகாலும் ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில், இவருடைய வித்தியாசமான போட்டோ ஷூட் தற்போது லைக்குகளை குவித்து வருகிறது.
இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் 'ரா ரா ராஜசேகர்' என்ற படத்தில் முதலில் ரம்யா பாண்டியன் நடித்திருந்தாலும், இந்த படம் ஒரு சில காரணங்களால் வெளியாகாமல் போனது. இதை தொடர்ந்து, 'டம்மி டப்பாசு' என்ற திரைப்படத்தில் ரம்யா பாண்டியன் நடித்திருந்தார். ஆனால் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை இவருக்கு கொடுக்கவில்லை என்றாலும், இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் ரம்யா பாண்டியன், கிராமத்து கதைக்களத்தில் நடித்த 'ஜோக்கர்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.
'வாரிசு' படத்தின் செகண்ட் சிங்கிள் 'தீ தளபதி'..! பொறி பறக்கவிடும் மாஸ் பாடல்... வெளியாகும் தேதி அறிவிப்பு!
மேலும் இவருடைய நடிப்பும் அனைவராலும் பாராட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து சமுத்திரக்கனி ஹீரோவாக நடித்த 'ஆண் தேவதை' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். மிகவும் துணிச்சலாக இரண்டு குழந்தைகளுக்கு தாயாக ரம்யா பாண்டியன் நடித்த இந்த திரைப்படம், விமர்சன ரீதியாக ஓரளவு வரவேற்பை பெற்ற போதிலும்... வசூல் ரீதியாக படுதோல்வியை சந்தித்தது.
பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்ட ரம்யா பாண்டியன், திரையுலகில் தொடர்ந்து நல்ல கதையம்சம் கொண்ட படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவரின் கைவசம் இடும்பன்காரி, மற்றும் நண்பகல் நேரத்து மயக்கம் உள்ளிட்ட படங்கள் உள்ளன.