Ramya Pandian: பக்கா வாய்ப்பை தட்டி தூக்கிய ரம்யா பாண்டியன்! அதுவும் சூப்பர் ஸ்டார் படத்தில்.. வைரல் போட்டோ!

Published : Dec 06, 2021, 01:22 PM IST

தன்னை தேடி வரும் பட வாய்ப்புகள் எல்லாவற்றிற்கும் ஓகே சொல்லாமல்... நிதானமாக படங்களை தேர்வு செய்து நடித்து வரும் ரம்யா பாண்டியன் (Ramya Pandian) அடுத்ததாக மலையாள சூப்பர் ஸ்டார் மமூட்டியுடன் நடிக்க உள்ளதை தன்னுடைய சமூக வலைதளத்தின் மூலம் புகைப்படம் வெளியிட்டு உறுதி செய்துள்ளார்.  

PREV
19
Ramya Pandian: பக்கா வாய்ப்பை தட்டி தூக்கிய ரம்யா பாண்டியன்! அதுவும் சூப்பர் ஸ்டார் படத்தில்.. வைரல் போட்டோ!

தன்னுடைய முதல் படமான 'ஜோக்கர்' படத்தில் சில காட்சிகளில் வந்தாலும், வித்தியாசமான நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் ரம்யா பாண்டியன்.

 

29

இந்த படத்தை தொடர்ந்து, இயக்குனர் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக நடித்த ஆண் தேவதை படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்தும், படம் தோல்வியை தழுவியதால் பட வாய்ப்புகள் குறைய துவங்கியது.

 

39

இதனால் தன்னுடைய சமூக வலைதளத்தில் மெல்லிய சேலையில்... தன்னுடைய இடுப்பழகை காட்டி இவர் வெளியிட்ட புகைப்படம், ஒரே நாளில் இவரை படு ஃபேமஸ்சாக ஆகியது மட்டும் இன்றி இளம் ரசிகர்களின் கனவு கன்னியாகவும் வலம் வர வைத்தது.

 

49

பின்னர் விஜய் டிவியின் குக் வித் கோமாளி, மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் சாமர்த்தியமாக விளையாடி... 100 நாட்கள் பிக்பாஸ் வீட்டின் உள்ளே இருந்தார்.

 

59

வெற்றிபெறும் வாய்ப்புகள் இருந்தும், ஆரியை பற்றி காட்டமாக இவர் பேசியதால்... ஓட்டுகள் குறைந்து வெற்றி பெரும் வாய்ப்பு இவருக்கு குறைத்து.

 

69

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர், சூர்யா தயாரித்த ‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’ படத்தில் ஹீரோயினாக நடித்து அசத்திய ரம்யா பாண்டியன். தற்போது மேலும் ஒரு படத்தில் கமிட் ஆகி உள்ளார்.

 

79

 அதன்படி அவர் அடுத்ததாக பிரபல மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி ஹீரோவாக நடிக்கும் ‘நண்பகல் நேரத்து மயக்கம்' என்கிற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது.

 

89

இந்த தகவலை மம்முட்டியுடன் எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரம்யா பாண்டியன் உறுதி செய்துள்ளார். இந்த புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருவதுடன்... மிகவும் பொறுமையாக பக்கா வாய்ப்புகளை மட்டுமே ஒப்புக்கொள்ளும் ரம்யா பாண்டியனுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.

 

 

99

இப்படத்தை  லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்குகிறார். இவர் மலையாளத்தில் ஆமென், அங்கமாலி டைரிஸ், ஜல்லிகட்டு போன்ற ஹிட் படங்களை இயக்கியவர். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பழனியில் நடைபெற்று வருகிறது. இதில் நடிகை ரம்யா பாண்டியன் கலந்து கொண்டு நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

 

 

click me!

Recommended Stories