Katrina Kaif - Vicky Kaushal wedding: கத்ரீனா கைஃப் - விக்கி கௌஷல் திருமணத்திற்காக பரபரப்பாக நடக்கும் வேலைகள்!

Published : Dec 06, 2021, 11:35 AM IST

கத்ரீனா கைஃப் மற்றும் விக்கி கௌஷலின் திருமண கொண்டாட்டங்கள் நாளை முதல், (டிசம்பர் 7) தொடங்க உள்ளது. எனவே மணமகன் மற்றும் மணமகள் வீட்டார் திருமணம் நடைபெற உள்ள இடத்திற்கு செல்ல துவங்கியுள்ளனர். இது குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.  

PREV
16
Katrina Kaif - Vicky Kaushal wedding: கத்ரீனா கைஃப் - விக்கி கௌஷல் திருமணத்திற்காக பரபரப்பாக நடக்கும் வேலைகள்!

கத்ரீனா கைஃப் மற்றும் விக்கி கௌஷலின் திருமணம் தான் தாப்ரோது சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படும் ஹாட் டாப்பிக்காக மாறியள்ளது.

 

26
Katrina kaif

நாளைய தினம் இவர்களுடைய திருமண கொண்டாட்டங்கள் துவங்கி 9 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பிரபலங்கள் கலந்து கொள்ளும் காக்டெய்ல் விருந்து, சங்கீத், மெஹந்தி, ஹல்தி என மிக பிரமாண்டமாக பல்வேறு நிகழ்வுகள் நடைபெற உள்ளன. அதைத் தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலம் பார்வாராவின் சவாய் மாதோபூர் சிக்ஸ் சென்ஸ் கோட்டையில் இவர்களது  திருமணம் நடைபெறும்.

 

36

நேற்றிரவு, கத்ரீனா மற்றும் அவரது தாயார்,  மணமகன் விக்கி கௌஷல் வீட்டிற்கு சென்ற புகைப்படங்கள் சில வெளியாகி வைரலானது. இதை தொடர்ந்து இன்று அதிகாலை முதலே கத்ரீனாவின் வீட்டில் வேலை செய்யும்  ஊழியர்கள் பல்வேறு பொருட்களை அவர்களது கார்களில் நிரப்பும் வீடியோக்கள் வெளியாகியுள்ளது. எனவே  குடும்பத்தினரும் எப்போது வேண்டுமானாலும் இவருடைய குடும்பத்தினர் ராஜஸ்தானுக்கு பார்ப்பார்கள் என கூறப்படுகிறது.

 

46

மேலும் கத்ரீனா மற்றும் விக்கி கௌஷல் இருவரும், ராஜஸ்தானுக்கு தனி விமானத்தின் மூலம் செல்வார்கள் என கூறப்படுகிறது.

 

56

இவர்களது திருமணத்தில் பல முக்கிய பாலிவுட் பிரபலங்கள் அழைக்கப்படவில்லை என்கிற சர்ச்சை ஒருபுறம் சென்று கொண்டிருந்தாலும்,  கத்ரீனாவின் தோழியும், உடற்பயிற்சி பயிற்சியாளருமான ஜாஸ்மின் கராச்சிவாலா, டாக்டர் ஜூவல் கமாடியா,  விராட் கோலி, அனுஷ்கா ஷர்மா ஆகியோர் கத்ரீனா கைஃப் திருமணத்தில் கலந்து கொள்ள உள்ளது உறுதியாகியுள்ளது.

 

66

திருமண கொண்டாட்டங்களுக்குப் பிறகு, கத்ரீனா கைஃப் மற்றும் விக்கி கௌஷல் ஆகியோர் டிசம்பர் 10 ஆம் தேதி சிறிய தேனிலவுக்கு ரன்தம்போருக்கு புறப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

 

click me!

Recommended Stories