கொரோனாவால் இறந்த மனைவியின் கல்யாண புகைப்படத்தை கண்ணீரோடு பகிர்ந்த அருண் ராஜா காமராஜ்! வைரலாகும் போட்டோ..!

Published : Dec 06, 2021, 10:46 AM ISTUpdated : Dec 06, 2021, 10:47 AM IST

தமிழ் திரையுலகில், நடிகர்-இயக்குனர்-பாடலாசிரியர் என பல்வேறு வகையில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி தனக்கான தனி இடத்தை பிடித்த அருண் ராஜா காமராஜின் (Arun Raja Kamaraj) மனைவி சிந்துஜா (Sindhuja) கொரோனா தொற்று காரணமாக கடந்த மே மாதம் உயிரிழந்த நிலையில், தன்னுடைய திருமண நாளில் கல்யாண படத்தை பகிர்ந்து, கண்ணீருடன் வாழ்த்து கூறியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.  

PREV
17
கொரோனாவால் இறந்த மனைவியின் கல்யாண புகைப்படத்தை கண்ணீரோடு பகிர்ந்த அருண் ராஜா காமராஜ்! வைரலாகும் போட்டோ..!

அட்லீ இயக்கத்தில் வெளியான 'ராஜா ராணி' படத்தில் காமெடி நடிகரான அறிமுகமான அருண்ராஜா காமராஜ், அதன் பின்னர் 'மரகதா நானாயம்', 'நட்புனா என்னானு தெரியுமா' மற்றும் சமீபத்திய 'கா பெ ரணசிங்கம்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

 

27

ஒரு பாடலாசிரியராகவும் பாடகராகவும் ரஜினிகாந்தின் கபாலி படத்தில் இடம்பெற்ற 'நெருப்புடா நெருங்குடா' பாடல் வரிகளை எழுதி உலக அளவில் பிரபலமானவர். அதே போல் விஜய் நடித்த 'பைரவா' படத்தில் 'வர்லாம் வா' பாடலை எழுதியவரும் இவர் தான்.

 

37

சிவகார்த்திகேயனின் கல்லூரி கால நண்பரான இவர், இவர் தயாரித்து நடித்த, பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட 'கனா' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்தில்  ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் காயகியாக நடித்தார். அருண்ராஜாவின் முதல் படமே வணிக ரீதியான வெற்றியை கண்டார்.

 
47

தற்போது உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும்  'Article 15' என்கிற படத்தின் தமிழ் ரீமேக்கை 'நெஞ்சுக்கு நீதி' என்கிற பெயரில் ரீமேக் செய்து வருகிறார்.

 

57

இந்த படத்தின் வேலைகளில் பிசியாக இறங்கிய போது, கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாகியதால், அனைத்து பணிகளும் முடங்கியது. மேலும் ஃபேஷன் டிசைனரான, இவரது மனைவி சிந்துஜாவிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

67

கொரோனாவிற்கு பல திரைபிரபலங்கள் உயிர் பலியான நிலையில்... அருண் ராஜா காமராஜின் மனைவியின் இழப்பும் ஈடுசெய்ய முடியாத ஒன்றாகவே பார்க்கப்பட்டது.

 

 

77

இந்நிலையில் இன்று தன்னுடைய திருமண நாளை நினைவு கூர்ந்து... திருமணநாள் வாழ்த்துகள் பாப்பி என கண்ணீருடன் தன்னுடைய திருமண புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதை பார்த்து பலர் அவருக்கு தங்களுடைய ஆறுதல்களை கூறி வருகிறார்கள்.

 

click me!

Recommended Stories