சன் நெக்ஸ்ட் OTT தளத்தில் தீபாவளி கொண்டாட்டமாக நேரடியாக வெளியாகும் “ராம்போ”!

Published : Oct 06, 2025, 06:13 PM IST

Rambo movie OTT Release: தென் இந்தியாவின் முன்னணி OTT தளங்களில் ஒன்றான சன் நெக்ஸ்ட், OTT தளத்தில் நேரடியாக “ராம்போ” திரைப்படம் ரிலீசாக உள்ளது.

PREV
15
அதிரடி ஆக்சன் படமாக உருவாகியுள்ள ராம்போ:

நடிகர் அருள்நிதி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ராம்போ படத்தை, கொம்பன், குட்டிப்புலி, புலிக்குத்தி பாண்டி, விருமன் போன்ற அழுத்தமான கிராமப்புற கமர்ஷியல் படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமான, புகழ் பெற்ற இயக்குநர் முத்தையா இயக்கியுள்ளார். தன் வழக்கமான பாணியிலிருந்து விலகி, இம்முறை நகர வாழ்க்கையை மையமாகக் கொண்டு இவர் இயக்கியுள்ள “ராம்போ” திரைப்படம் நகர பின்னணியில் ஒரு அதிரடி ஆக்சன் கமர்ஷியல் பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ளது.

25
குத்துசண்டை வீரராக உதயநிதி:

ஒரு தைரியமான இளம் குத்துச்சண்டை வீரன், ஒரு பெண்ணுக்கு (தன்யா ரவிச்சந்திரன்) உதவ முயற்சிக்கும் போது தொடங்கும் கதை, அதன்பின் அவன் வாழ்க்கையில் நடக்கும் அதிரடி சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. முத்தையாவின் இயக்கத்தில், உணர்வுப்பூர்வமான அம்சங்களுடன், அதிரடி, ஆக்சன் நிரம்பிய அழுத்தமான படமாக இப்படம் ரிலீசாக உள்ளது.

35
ரசிகர்கள் கொண்டாடும் உரத்தில் உருவாகியுள்ளது:

படம் குறித்து இயக்குநர் முத்தையா கூறியதாவது.., “இந்தப் படம் எனது பாணியிலிருந்து மாறுபட்டு, ஒரு புதிய கதையை வேறு பாணியில் சொல்லும் வாய்ப்பை எனக்கு வழங்கியது. அருள்நிதியுடன் இணைந்து பணிபுரிந்தது உற்சாகமான அனுபவமாக இருந்தது. ‘ராம்போ’ படத்தை கண்டிப்பாக ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்று நம்புகிறேன்.”

45
ராம்போ படத்தில் நடித்துள்ள பிரபலங்கள்:

பிக் பாஸ் புகழ் ஆயிஷா இந்த படத்தின் மூலம் பெரிய திரைக்கு அறிமுகமாகிறார். மேலும் மலையாள நடிகர் ரஞ்சித் சஜீவ் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஹரீஷ் பேரடி மற்றும் VTV கணேஷ் முக்கியமான வேடங்களில் இணைந்து நடித்துள்ளனர். பிரபல ஒளிப்பதிவாளர் R.D. ராஜசேகர் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார், முன்னணி இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். நகரப் பின்னணியில் ஆக்சன், அதிரடி மற்றும் உணர்ச்சிரமான பொழுதுபோக்கு படமாக “ராம்போ” உருவாகியுள்ளது.

55
நேரடியாக ஓடிடியில் ரிலீஸ்:

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டிரெய்லர் ஏற்கனவே ரசிகர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்களிடையே சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த தீபாவளிக் கொண்டாட்டத்தை வீட்டிலிருந்தபடியே அனுபவிக்க, அக்டோபர் 10ஆம் தேதி முதல் “ராம்போ” படத்தை சன் நெக்ஸ்ட் தளத்தில் ரசிகர்கள் பார்த்து மகிழலாம்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories