பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம், மராத்தி என பல்வேறு மொழிகளில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதில் அதிக சம்பளம் வாங்குவது யார் என்பதை பார்க்கலாம்.
இந்திய தொலைக்காட்சி வரலாற்றில் மிகப்பெரிய ரியாலிட்டி ஷோ பிக் பாஸ். நாட்டின் பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில், போட்டியாளர்கள் ஒரு வீட்டிற்குள் தங்க வைக்கப்படுவார்கள். அவர்களுக்கு வெளி உலகத்துடன் எந்த தொடர்பும் இருக்காது. வீட்டில் நடக்கும் விதவிதமான டாஸ்க்குகளில் சிறப்பாக செயல்பட்டு, ரசிகர்களிடம் இருந்து அதிக வாக்குகளைப் பெறும் போட்டியாளர் பிக் பாஸ் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். தற்போது தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9-வது சீசன் நடந்து வரும் நிலையில், ஹிந்தியில் 19வது சீசன் நடைபெறுகிறது.
24
சல்மான் கான் சம்பளம்
சல்மான் கான் தான் பிக் பாஸ் ஹிந்தியின் தொகுப்பாளராக இருக்கிறார். பிக் பாஸ் தொகுப்பாளர் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்' என்று ரசிகர்களால் அதிகம் பாராட்டப்படுபவர் சல்மான் கான் தான். சுவாரஸ்யமாகவும், அதே சமயம் வெளியேற்ற வேண்டிய இடத்தில் கண்டிப்புடனும், கோபப்பட வேண்டிய இடத்தில் கோபப்பட்டும் 19 சீசன்களாக பிக் பாஸில் கலக்கி வருகிறார். நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சல்மான் கான் வாங்கும் சம்பளம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
34
ஒரு நாளைக்கு 10 கோடி
பிக் பாஸ் ஹிந்தி சீசன் 19-க்காக சல்மான் கான் 120-150 கோடி வரை சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது. வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே அவர் நிகழ்ச்சிக்கு வருகிறார். அந்த வார இறுதி எபிசோடுகளும் ஒரே நாளில் படமாக்கப்படும். அதற்காக சல்மான் கானின் சம்பளம் 8 முதல் 10 கோடி வரை இருக்குமாம். மொத்தம் 15 வார இறுதி நாட்கள் இருக்கும். அதற்காக பல்க் ஆன தொகையை சம்பளமாக வாங்கி வருகிறார் சல்மான் கான். அவர் சினிமாவில் ஹீரோவாக நடிப்பதற்காக வாங்கும் சம்பளத்தை விட இது அதிகமாகும். இந்திய பிக் பாஸ் வரலாற்றிலேயே அதிக சம்பளம் வாங்கும் தொகுப்பாளரும் சல்மான் கான் தான்.
இவருக்கு அடுத்தபடியாக அதிக சம்பளம் வாங்கும் தொகுப்பாளராக கமல்ஹாசன் இருந்து வந்தார். அவர் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் 7 சீசன்களை தொகுத்து வழங்கினார். 8-வது சீசன் முதல் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்குகிறார். கமலுக்கு நிகராக அவரின் தொகுத்து வழங்கும் ஸ்டைல் இருப்பதால், மக்களும் அவரை ஏற்றுக்கொண்டுள்ளார். தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க நடிகர் விஜய் சேதுபதிக்கு ரூ.70 முதல் 75 கோடி சம்பளமாக வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.