ஆதாரத்துடன் சிந்தாமணியை லாக் பண்ணிய முத்து... அடுத்தடுத்து உடையும் உண்மைகள் - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்

Published : Oct 06, 2025, 02:50 PM IST

சிறகடிக்க ஆசை சீரியலில் மீனாவின் அம்மா கடையை தூக்க சொன்னது சிந்தாமணி தான் என்கிற உண்மை முத்துவுக்கு தெரியவந்த நிலையில், அவரின் அடுத்தக்கட்ட முடிவு என்ன என்பதை பார்க்கலாம்.

PREV
14
Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலில் மீனாவின் அம்மா கடையில் அழுகிய தேங்காய் மற்றும் பூக்கள் விற்பதாக பொய் புகார் அளித்த சிந்தாமணி, அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்து அந்தக் கடையை கோவிலில் இருந்து அகற்றம் செய்ய வைத்திருந்தார். அதிகாரி ஒருவர் லஞ்சம் வாங்கி தான் இந்த விஷயத்தை செய்தார் என்பதை அறிந்த முத்து, மேல் அதிகாரி ஒருவரை சந்தித்து தன்னுடைய மாமியார் கடையை மீட்டுத் தருமாறு கூறுகிறார். அதுமட்டுமின்றி லஞ்சம் வாங்கிய அதிகாரியை கையும் களவுமாக மேலதிகாரியிடம் சிக்க வைக்க தன்னுடைய நண்பனை அனுப்பி, அவரிடம் கடைக்கு பர்மிஷன் கேட்பது போல் கேட்க, அவரும் 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிக் கொண்டு பர்மிஷன் வழங்குகிறார்.

24
கையும் களவுமாக சிக்கிய அதிகாரி

அவர் லஞ்சம் வாங்கியதை முத்து உடன் இருந்து மறைந்து பார்த்த மேலதிகாரி, நேரடியாக அவரிடம் சென்று எதற்காக 10 ஆயிரம் வாங்குனீங்க என கேட்கிறார். அதற்கு அவர் கடை வைப்பதற்காக பேசிக் கொண்டிருந்தோம் என மழுப்ப, அவரின் பாக்கெட்டில் இருந்து 10 ஆயிரம் ரூபாயை எடுத்த மேலதிகாரி, லஞ்சமா வாங்குற, கடை நடத்துவதற்கும், அதைவிட அதிக பணம் கொடுத்தால் கடையை தூக்குவதற்கும் தான் நீ வேலை பார்த்துகிட்டு இருக்கியா என செம டோஸ் கொடுக்கிறார். அரசாங்க அதிகாரி, மக்களுக்கு சேவை செய்யதான இருக்கீங்க, உன்னுடைய தேவைக்கு அவர்களிடம் லஞ்சம் வாங்குறியா என திட்டுகிறார்.

34
முத்துவுக்கு தெரியவரும் உண்மை

இப்படி லஞ்சம் வாங்கிக் கொண்டு வேலை பார்ப்பதால் உன்னை வேலையை விட்டே டிஸ்மிஸ் பண்ணுறேன் என அதிரடியாக கூறுகிறார் மேலதிகாரி. வேலை பறிபோகிவிடக் கூடாது என்பதால் பதறிப்போய் உண்மையை உலறிவிடுகிறார் அந்த அதிகாரி. அதன்படி சிந்தாமணி என்பவர் தான் தன்னிடம் பணம் கொடுத்து அந்த பூக்கடையை தூக்க சொன்னதாக ஒத்துக் கொள்கிறார். இதையடுத்து யார் அந்த சிந்தாமணி என்று முத்துவிடம் மேலதிகாரி கேட்க, அவர் தன்னுடைய மாமியாரின் தொழில் போட்டியாளர் என்றும், அவர் பூக்கடை நடத்துவது பிடிக்காமல் தான் இப்படி செய்திருக்கிறார் என்றும் சொல்கிறார்.

44
மீனா ஸ்கூட்டர் கிடைத்ததா?

இதையடுத்து வீட்டுக்கு போகும் முத்துவிடம் மீனா கண்ணீர் விட்டு அழுகிறார். தன்னுடைய ஸ்கூட்டி தொலைந்து போன விஷயத்தை சொல்ல, முத்துவும், சிந்தாமணி தான் உன்னுடைய அம்மா கடையை தூக்க லஞ்சம் கொடுத்திருக்கிறார். அதனால் உன்னுடைய ஸ்கூட்டி தொலைந்து போனதற்கும் அவர் காரணமாக இருக்கக்கூடும் என்று சொல்ல, இது தொடர்பாக திருட்டு வண்டிகளை விற்பனை செய்யும் இடத்துக்கு சென்று விசாரிக்க செல்கிறார் முத்து. அப்போது அங்கு என்ன நடந்தது? முத்துவுக்கு உண்மை தெரிந்ததா? மீனாவின் ஸ்கூட்டர் கிடைத்ததா? என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories