Ramayana X Review: ராவணனாக மிரட்டிய யஷ்... நித்திஷ் திவாரியின் பிரமாண்ட 'ராமாயணா: பார்ட் 1' படம் எப்படி இருக்கு? பிளஸ் & மைனஸ் என்ன?

Published : Nov 05, 2026, 07:49 AM IST

Ramayana X Review: நித்திஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி மற்றும் யஷ் நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகியுள்ள பிரம்மாண்ட பான்-இந்தியா திரைப்படம் 'ராமாயணா: பார்ட் 1'.

PREV
15
'ராமாயணா' படத்திற்கு மக்கள் & விமர்சகர்கள் மத்தியில் வரவேற்பு

Ramayana X Review: நித்திஷ் திவாரி இயக்கத்தில், ரன்பீர் கபூர், சாய் பல்லவி மற்றும் யஷ் ஆகியோரின் நடிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள பான்-இந்தியா திரைப்படம் 'ராமாயணா: பார்ட் 1'. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று உலகளவில் திரையரங்குகளில் வெளியாகி உள்ள நிலையில், நேற்று பத்திரிகையாளர்களுக்கான சிறப்புக் காட்சியும் திரையிடப்பட்டது.

ஏற்கனவே பலமுறை திரையிலும் சின்னத் திரையிலும் பார்க்கப்பட்ட இதிகாசக் கதையாக இருந்தாலும், அதீத எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ள இப்படத்திற்குப் பொது மக்களும் விமர்சகர்களும் எக்ஸ் தளம் மற்றும் நேரடி நேர்காணல்களில் தங்களது கலவையான மற்றும் நேர்மறையான விமர்சனங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

25
படத்தின் முக்கிய சிறப்பம்சங்கள் & பலங்கள் என்ன?

நித்திஷ் திவாரியின் இயக்கம் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. பக்தியையும் மூலக்கதையின் உணர்வையும் சிதைக்காமல் நேர்த்தியாகத் திரையில் கொண்டு வந்துள்ளதாகவும், இதுவரை கேட்ட ராமாயணத்தை விட சில புதிய விஷயங்களைச் சேர்த்துள்ளதாகவும் பாராட்டுகள் குவிந்துள்ளன. குறிப்பாக படத்தின் இரண்டாம் பாகத்திற்கான லீட் அருமையாக அமைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டு உள்ளது.

நடிகர்களின் நடிப்பு: திரையில் ராவணனாக யஷ் வரும் காட்சிகள் மிரட்டலாகவும் கம்பீரமாகவும் இருப்பதாக ரசிகர்கள் கொண்டாடுகின்றனர். யஷ்ஷின் லுக், அறிமுகக் காட்சி, பத்து கெட்டப்புகளில் வரும் காட்சிகள் மற்றும் எலிவேஷன்கள் படத்திற்கே மிகப்பெரிய ஹைலைட்டாக அமைந்திருப்பதாகவும், இதற்கு 100/100 மதிப்பெண் கொடுக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

ஒருசிலர் ரன்பீரின் நடிப்பு சுமாராக இருந்ததாகக் கூறினாலும், பெரும்பாலான பார்வையாளர்கள் அவரது அமைதியான, கனிவான மற்றும் அழுத்தமான நடிப்பைப் பாராட்டியுள்ளனர். ராமர் கதாபாத்திரத்திற்குத் தேவையான கண்ணியம், அமைதி, தெய்வீகத் தன்மை மற்றும் முகபாவனைகளைச் சிறப்பாகக் கொண்டுவந்துள்ளதால், இது அவரது திரைப்பயணத்தில் ஒரு மைல்கல் எனப் புகழாரம் சூட்டியுள்ளனர். சீதை கதாபாத்திரத்திற்குத் தேவையான நளினத்தையும் அன்பையும் மிகச் சரியாக வெளிப்படுத்தி நேர்த்தியாக நடித்துள்ளார். துணை கதாபாத்திரங்களின் நடிப்பும் படத்திற்கு வலு சேர்த்துள்ளது.

35
விஎஃப்எக்ஸ் (VFX) & மேக்கிங் எப்படி இருந்தது?

ஹாலிவுட் தரத்திற்கு இணையான விஷூவல் அனுபவத்தையும், பிரம்மாண்ட மேக்கிங்கையும் கொடுத்துள்ளதாகப் பலரும் பாராட்டி உள்ளனர். குறிப்பாக ஜடாயு காட்சி, ராவணனின் அறிமுக காட்சி, இரண்டாம் பாதியின் கிராபிக்ஸ் மற்றும் போஸ்ட்-கிரெடிட் காட்சி ஆகியவை இந்திய சினிமாவே பெருமைப்பட வேண்டிய விஷூவல்கள் எனப் பாராட்டப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் ட்ரோல் செய்யப்பட்ட அளவுக்குக் குறைகள் இல்லாமல் சிறப்பான உழைப்பு திரையில் தெரிவதாகவும் கூறப்பட்டுள்ளது.

45
சுட்டிக்காட்டப்படும் பின்னடைவுகள் & விமர்சனங்கள்

2 பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ளதால், முதல் பாதி மற்றும் தொடக்க 30 நிமிடங்கள் மெதுவாகச் செல்வது போன்ற உணர்வைத் தருகிறது. கதை ஏற்கனவே அனைவருக்கும் அத்துப்படியான ஒன்று என்பதால் பெரிய அளவில் திருப்பங்கள் இன்றி நாடகத்தன்மை (Drama) அதிகமாக இருப்பதாகச் சிலர் கருதுகின்றனர்.

ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இசையமைத்துள்ள பின்னணி இசை படத்தைத் தாங்கிப் பிடித்தாலும், பாடல்கள் மனதில் பதியவில்லை என்றும், சில இடங்களில் இசை இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் என்றும் குறிப்பிட்ட பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ராமர் - சீதா இடையேயான எமோஷனல் காட்சிகள் சிலருக்குப் போதிய பிடிப்பை ஏற்படுத்தவில்லை என்றும், முதல் 45 நிமிடங்களில் சில இடங்களில் விஎஃப்எக்ஸ் சற்றே தரம் குறைவாகத் தெரிவதாகவும், இதனால் படம் சுமாரான அனுபவத்தையே தருவதாகவும் 'ராமாயணா ட்ராமாயணா' என்ற எதிர்மறை விமர்சனமும் முன்வைக்கப்பட்டுள்ளது.

55
பொதுமக்களின் இறுதித் தீர்ப்பு

குழந்தைகளுடன் குடும்பமாக வந்து தியேட்டரில் பார்க்கக்கூடிய ஒரு நல்ல டிஜிட்டல் முயற்சி இது. சில குறைகளும் முதல் பாதியில் சிறு தொய்வும் இருந்தாலும், யஷ்ஷின் அசுரத்தனமான நடிப்பு, ரன்பீரின் அமைதியான தோற்றம், பிரம்மாண்டமான ஜடாயு காட்சிகள் மற்றும் ஹாலிவுட் தர விஷூவல்களுக்காகவே நல்ல தொழில்நுட்பம் கொண்ட திரையரங்குகளில் தவறவிடாமல் ரசிக்க வேண்டிய பிரம்மாண்ட படைப்பாக 'ராமாயணா' பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories