கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி, பேரன்பு போன்ற வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்திருப்பவர் ராம். அவர் இயக்கத்தில் அண்மையில் உருவான திரைப்படம் தான் பறந்து போ. இப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டார், GKS பிரதர்ஸ் புரொடக்ஷன்ஸ், செவன் சீஸ் அண்ட் செவன் ஹில்ஸ் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் ராம், V. குணசேகரன், V. கருப்புச்சாமி, V. சங்கர் ஆகியோர் தயாரித்திருந்தனர். இப்படம் கடந்த ஜூலை 4ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இப்படத்தை தமிழகத்தில் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது.
24
ராமின் பறந்து போ
விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட இப்படத்தில் மிர்ச்சி சிவா, கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி, மிதுன் ராயன், அஜு வர்கீஸ், விஜய் யேசுதாஸ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். தந்தை மகனின் பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இப்படத்தின் பாடல்களுக்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்திருந்தார். பின்னணி இசையை யுவன் சங்கர் ராஜா அமைத்திருந்தார். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றை ராம் எழுதியுள்ளார். ஒளிப்பதிவு பணிகளை N. K. ஏகாம்பரம் மேற்கொண்டுள்ளார். தியா, ஜெஸ்ஸி குக்கு, பாலாஜி சக்திவேல், ஸ்ரீஜா ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
34
சர்வதேச பட விழாவில் கலக்கிய பறந்து போ
பறந்து போ திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் முன்னரே 54வது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் இப்படம் முதன்முதலில் திரையிடப்பட்டது. அங்கு அமோக வரவேற்பு கிடைத்தது. அதேபோல் முதலில் நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் செய்யும் எண்ணத்தில் இருந்த படக்குழு, பின்னர் முடிவை மாற்றிக்கொண்டு, தியேட்டருக்கு கொண்டு வந்தன. இப்படம் 3 பிஹெச்கே, பீனிக்ஸ் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு போட்டியாக ஜூலை 4ந் தேதி தியேட்டரில் ரிலீஸ் ஆனது. இப்படத்திற்கு விமர்சகர்கள் மத்தியில் மட்டுமின்றி ரசிகர்கள் மத்தியிலும் அமோக வரவேற்பு கிடைத்திருந்தது.
இந்நிலையில், பறந்து போ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் பற்றிய அப்டேட் வெளியாகி உள்ளது. வருகிற ஜூலை 25ந் தேதி இரண்டு முக்கிய படங்கள் ரிலீஸ் ஆவதால், பறந்து போ படம் தியேட்டரில் இருந்து தூக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதனால் ஓடிடிக்கு தாவிய அப்படம் வருகிற ஆகஸ்ட் 4ந் தேதி ஓடிடியில் வெளியாகும் என கூறப்படுகிறது. இப்படத்தின் ஓடிடி உரிமையை ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இதனால் ஆகஸ்ட் 4ந் தேதி முதல் அந்த ஓடிடி தளத்தில் பறந்து போ திரைப்படம் ஸ்ட்ரீம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.