Ram Charan Peddi Movie OTT Rights : 'பெத்தி' படத்தின் மூலம் ராம் சரண் ரிலீசுக்கு முன்பே சிக்ஸர் அடித்து வருகிறார். டீசர் முதல் சமீபத்தில் வெளியான 'சிகிரி' பாடல் வரை எல்லாமே ஹிட். 'Peddi' படத்தின் ஓடிடி உரிமம் குறித்து பார்க்கலாம்.
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் லேட்டஸ்ட் படம் பெத்தி. இந்தப் படத்தை இயக்குநர் புச்சி பாபு இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் ராம் சரண் கிராமத்து கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் இடம் பெற்ற சிகிரி பாடல் கிட்டத்தட்ட 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது.
25
பெத்தி ஓடிடி உரிமம்
இது ஒரு புறம் இருந்தாலும் இந்தப் படத்தின் அப்டேட் இப்போது வெளியாகியிருக்கிறது. அதன்படி பெத்தி படத்தின் ஓடிடி உரிமம் குறித்து முக்கியமான தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி இந்தப் படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாம். அதுவும் ரூ.130 கோடி கொடுத்து இந்த படத்தை வாங்கியிருக்கிறது.
35
ஓடிடி உரிமம் யாருக்கு?
தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி என்று பான் இந்தியா படமாக ஓடிடியில் வெளியாகிறது. கிட்டத்தட்ட ரூ.350 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்தப் படம் வெளியீட்டிற்கு முன்னதாகவே ரூ.130 கோடி வசூல் எடுத்துவிட்டது. இனி படம் வெளியான பிறகு குறைந்தது 220 கோடி எடுத்தாலே போதும். பட்ஜெட்டை அப்படியே அள்ளிவிடும். அதற்கும் கூடுதலாக வசூல் குவித்தால் தயாரிப்பாளருக்கு லாபம் தானே.
45
பெத்தி ரிலீஸ் தேதி
'பெத்தி' படத்திற்கு இருக்கும் எதிர்பார்ப்பை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம். வரும் 2026 ஆம் ஆண்டு மார்ச் 27 அன்று இப்படம் உலகளவில் வெளியாகிறது. தற்போது ஹைதராபாத்தில் ஒரு பெரிய ஆக்ஷன் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. இதன் பிறகு டெல்லியில் ஒரு ஷெட்யூல் உள்ளது.
55
படப்பிடிப்பு அப்டேட்
அதன் பிறகு ஹைதராபாத்தில் மற்றொரு பெரிய ஷெட்யூல் உள்ளது. இதில் ஒரு ஐட்டம் பாடல் படமாக்கப்படும். இதன் மூலம் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிடும். எனவே, 'பெத்தி' படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் இருக்காது. ஜான்வி கபூர் இப்படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.