Thangamayil will be Evicted from the House : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இந்த வாரத்திற்கான புரோமோ வீடியோ வெளியான நிலையில் தங்கமயில் வீட்டை விட்டு வெளியேற்றப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இந்த வார புரோமோ வீடியோ
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் தங்கமயில் மற்றும் சரவணன் இடையிலான சண்டைக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது. இத்தனை நாட்களாக உண்மையை சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவித்து வந்த சரவணன் இந்த வாரம் தங்கமயில் பற்றிய எல்லா உண்மைகளையும் குடும்பத்தில் உள்ளவர்களிடம் சொல்லிவிட்டார். பாதி சொல்லிக் கொண்டிருக்கும் போதே அதிர்ச்சியில் கோமதி மயக்கடமடைந்தார். பின்னர் முழுவதுமாக சொல்லி முடிக்கவும் கோமதி மற்றும் பாண்டியன் உள்பட குடும்பத்தில் உள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
25
விஜய் டிவி சீரீயல் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்
இத்தனை நாட்களாக தங்கமயிலுக்கு ஆதரவாக இருந்தது கோமதி மற்றும் பாண்டியன் மட்டுமே. அப்படியிருக்கும் போது சரவணனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும் வேறு தங்கமயில் பொய் சொல்லியிருக்கிறார். தனது மகனை நம்பாமல் வீட்டிற்கு வந்த மருமகள் சொல்வதை வேத வாக்காக பாண்டியனும் கோமதியும் நம்பினர்.
35
தங்கமயில் சரவணன் சர்ச்சை
அப்படியிருக்கும் போது இப்போது எல்லோருக்கும் எல்லா உண்மையும் தெரிந்துவிட்டது. ஆனால், நகை விஷயம் மட்டும் இன்னும் தெரியவில்லை. அதுமட்டுமில்லாமல் தங்களது கடையில் மாணிக்கம் காச எடுத்ததை சரவணன் சொல்லவில்லை. இதையெல்லாம், சொன்னால் தங்கமயிலின் நிலை என்னாகும். எங்கு சரவணன் எல்லா உண்மைகளையும் சொல்லிவிடுவாரோ என்று பயந்த தங்கமயில் அத்தை இனிமேல் நாங்கள் இருவரும் சண்டை போடாமல் ஒன்றாக வாழ்கிறோம் என்று ஒரு டிராமாவை ஆரம்பித்தார்.
45
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இந்த வார புரோமோ வீடியோ
ஆனால், அதற்குள்ளாக கோபம் உச்சிக்கு ஏறிய நிலையில் எல்லா உண்மைகளையும் சரவணன் புட்டு புட்டு வைத்துள்ளார். இது இந்த வாரம் முழுவதும் ஒளிபரப்பு செய்யப்படும் காட்சிகள். அப்படியிருக்கும் போது உண்மை தெரிந்த பிறகு பாண்டியன் என்ன செய்வார் அல்லது கோமதி தான் என்ன செய்வார். சரி, நடந்தது நடந்துவிட்டது என்று கூறி தங்கமயிலை ஏற்றுக் கொள்வார்களா? அல்லது அவரை வீட்டை விட்டு துரத்தியடிப்பார்களா என்ற கேள்வி எழுகிறது.
55
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்
இப்படி அடுக்கடுக்கா பொய் சொன்ன ஒருத்தியுடன் எப்படி ஒருவரால் சந்தோஷமாக குடும்பம் நடத்த முடியும். அதனால் சரவணன் எப்படியும் தங்கமயிலை விவாகரத்து செய்வதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. சரி, இந்த வாரம் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.