1370 கோடி சொத்துக்கு அதிபதியாக உள்ள ராம்சரணின் அரண்மனை போன்ற வீட்டில் இம்புட்டு வசதிகளா?

நடிகர் ராம்சரண் இன்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், அவரின் சொத்து மதிப்பு, அவர் வாங்கிய ஆடம்பர பங்களா பற்றியும் பார்க்கலாம்.

ram charan birthday here the details of hyderabad house luxurious lifestyle networth gan

Ram charan Birthday : சிரஞ்சீவியின் மகனான ராம் சரண், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர் படத்தில் நடித்ததன் மூலம் பான் இந்தியா ஸ்டாராக உயர்ந்த ராம் சரண்,  இன்று தனது 40வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். ராம்சரணுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், அவரின் சொத்து மதிப்பு மற்றும் சொகுசு வீடு குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ram charan birthday here the details of hyderabad house luxurious lifestyle networth gan

ராம் சரண் சொத்து மதிப்பு

ராம் சரணின் சொத்து மதிப்பு சுமார் 1370 கோடியாம். இவருக்கு ஐதராபாத்தில் 30 கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு உள்ளது. ஐதராபாத்தின் ஜூபிலி ஹில்ஸில் அவரது ஆடம்பர பங்களா அமைந்துள்ளது. இதன் மதிப்பு 35 முதல் 38 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. ராம் சரணின் இந்த பங்களா 25 ஆயிரம் சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது. இதில் பெரிய தோட்டம் உள்ளது, அங்கு குடும்பத்தினர் உடன் பார்ட்டி கொண்டாடுவாராம் ராம்சரண்.


சகல வசதியுடன் கூடிய வீடு

ராம் சரண் வீட்டின் உள்புறம் உள்ள அலங்காரப் பொருட்கள் பெரும்பாலும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. ஐதராபாத்தில் உள்ள இந்த பங்களாவில் பிரம்மாண்ட நீச்சல் குளம், பிரத்யேக ஜிம், மினி தியேட்டர் என சகல வசதியும் உள்ளது.

ராம்சரணின் விமான நிறுவனம்

பங்களாவைத் தவிர, ராம் சரண் மும்பையில் ஒரு ஆடம்பர பென்ட் ஹவுஸையும் வைத்துள்ளார். ராம் சரண் ஒரு விமான நிறுவனத்தின் உரிமையாளரும் ஆவார். ட்ரூஜெட் ஏர்லைன்ஸ் எனப்படும் விமான நிறுவனத்திற்காக அவர் ஒரு காலத்தில் சுமார் 127 கோடி ரூபாய் செலவு செய்தார்.

வீட்டில் ஜிம்

ராம் சரண் வீட்டில் உடற்பயிற்சி செய்வதற்காக தனி இடம் உள்ளது. இங்கு அவர் உடற்பயிற்சியுடன் யோகா மற்றும் மெடிடேஷன் செய்கிறார். ராம் சரண் மற்றும் அவரது மனைவி உபாசனா ஆகியோர் குடும்பத்துடன் ஒவ்வொரு பண்டிகையையும் தங்கள் வீட்டில் தான் கொண்டாடுகிறார்கள்.

ராம் சரண் வீட்டில் கோவில்

ராம் சரண் மிகவும் மத நம்பிக்கை உள்ளவர், அவர் தனது வீட்டில் பெரிய கோவிலை கட்டியுள்ளார். தினமும் காலை மற்றும் மாலை அவரது வீட்டில் பூஜை நடக்குமாம். ராம் சரண் வீட்டிலிருந்து சூரிய உதயத்தின் அழகான காட்சி தெரியும். இதற்காக வீட்டில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ராம் சரண் கார் கலெக்‌ஷன்

ராம் சரணுக்கு கார்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அவரது கேரேஜில் ரோல்ஸ் ராய்ஸ் பேண்டம், ஆஸ்டன் மார்டின் V8 வான்டேஜ், மெர்சிடிஸ் மேபேக் GLS 600 போன்ற கார்கள் உள்ளன. ராம் சரண் ஒரு கட்டுமான நிறுவனத்தையும் வைத்துள்ளார். இதன் மதிப்பு 100-200 கோடி ரூபாய் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Latest Videos

vuukle one pixel image
click me!