RRR Movie Sale: பிரமிக்க வைத்த 'RRR' படத்தின் வியாபாரம்..! அடேங்கப்பா இத்தனை கோடியா?

Published : Nov 26, 2021, 06:27 PM IST

இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி (SS Rajamouli) இயக்கத்தில் விரைவில் வெளியாக உள்ள, RRR திரைப்படத்தின் வியாபாரம் (RRR Movie Sale) குறித்து வெளியாகியுள்ள தகவல் ஒட்டு மொத்த திரையுலகத்தையும் பிரமிக்க வைத்துள்ளது.  

PREV
15
RRR Movie Sale: பிரமிக்க வைத்த 'RRR' படத்தின் வியாபாரம்..! அடேங்கப்பா இத்தனை கோடியா?

தெலுங்கு திரையுலகின் பிரம்மாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் 2017ம் ஆண்டு வெளியான திரைப்படம் பாகுபலி 2 . இதன் முதல் பாகம் வெளியாகி சரமாரியான சாதனைகளை முறியடித்த நிலையில், இரண்டாம் பாகம் அதே விறுவிறுப்போடு தயாரானது. பிரபாஸ், தமன்னா, ராணா டகுபதி, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர் உள்ளிட்டோர் நடித்திருந்த இந்த படம் இந்திய சினிமாவையும் கடந்து உலக அளவில் ஏராளமான சாதனைகளை படைத்தது.

 

25

உலக அளவிலான பாக்ஸ் ஆபிஸில் கிட்டத்தட்ட ஆயிரத்து 810 கோடி வரை வசூல் செய்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. எனவே இந்த ஒரே படத்தின் மூலம் உலக சினிமாவையே, தென்னிந்திய திரையுலகின் பக்கம் திரும்பி பார்க்க வைத்த இயக்குனர் என்கிற பெருமைக்கும் சொந்தக்காரர் ஆனார் ராஜமௌலி.

 

35

இந்த படத்தை தொடர்ந்து தற்போது... கோமராம் பீம் , மற்றும் அல்லு சித்தராம ராஜு, ஆகிய இரு சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து, 'RRR' என்கிற பிரமாண்ட படத்தை இயக்கி முடித்துள்ளார் ராஜமௌலி. இந்த படத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண், ஆகியோர் ஹீரோவாகவும் அஜய் தேவ்கான், சமுத்திர கனி, ஆலியா பட் உள்ளிட்ட பலர் மிக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

 

45

ஜனவரி மாதம் 7 ஆம் தேதி இந்த படத்தை திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ள நிலையில், படத்தின் புரொமோஷன் பணிகளும் இப்போதே துவங்கி விட்டது. ஏற்கனவே இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ, மற்றும் மூன்று சிங்கிள் பாடல்கள் வெளியாகியுள்ளது. குறிப்பாக ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் ட்வின் டான்ஸ் ஆடிய நாட்டு கூத்து பாடல் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் வெளியான நிலையில், இன்றைய தினம் தேச உணர்வை போற்றும் விதமாக 'உயிரே' பாடல் வெளியானது.

 

55

இந்நிலையில் தற்போது, இந்த படத்தின் வியாபாரம் குறித்த தகவல் வெளியாகி ஒட்டு மொத்த திரையுலகினரையும் வியக்க வைத்துள்ளது. குறிப்பாக, 5 மொழிகளில் உருவாகியுள்ள இந்த படம் ஒட்டுமொத்தமாக 700 கோடிக்கு வியாபாரம் ஆகியுள்ளனாகவும், ஹிந்தி உரிமை மற்றும் சுமார் 100 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த படத்தை எந்த நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.

 

click me!

Recommended Stories