நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் காதலர் இந்த நடிகரா? பிறந்தநாளில் தீயாக பரவும் புகைப்படம்..!!

Published : Oct 10, 2021, 05:07 PM IST

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் பிசியாக நடித்து வரும், நடிகை ரகுல் ப்ரீத் சிங் (Rakul Preet Singh) தனது பிறந்தநாளில் ஜாக்கி பக்னானியுடனான (Jackky Bhagnani ) காதலை வெளிப்படுத்தும் விதமாக இவரது பதிவு அமைந்துள்ளது.  

PREV
16
நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் காதலர் இந்த நடிகரா? பிறந்தநாளில் தீயாக பரவும் புகைப்படம்..!!

ரகுல் ப்ரீத் சிங்குக்கு இன்று தன்னுடைய 31 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்நிலையில் இவர் பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான, ஜாக்கி பக்னானியுடன், கைகளைப் பிடித்துக் கொண்டு ஒரு பூங்காவில் உலா வரும் புகைப்படத்தை வெளியிட்டு தன்னுடைய காதலை உறுதிப்படுத்தும் விதமாக பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

 

 

26

இந்த புகைப்படத்தை வெளியிட்டு, ஜாக்கி பக்னானி... ரகுலுக்கு தெரிவித்துள்ள வாழ்த்தில், "நீங்கள் இல்லாமல், நாட்கள் நாட்கள் போல் தெரியவில்லை. நீங்கள் இல்லாமல், மிகவும் ருசியான உணவை சாப்பிடுவது வேடிக்கையாக இல்லை. உலகத்தை அர்த்தப்படுத்தும் மிக அழகான ஆன்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்".  உங்கள் நாள் உங்கள் புன்னகையைப் போல அழகாகவும் இருக்கட்டும். என தெரிவித்திருந்தார்.

 

36

ரகுல் ப்ரீத் சிங்கும் அதே படத்தை பகிர்ந்து, ஜாக்கி பக்னனிக்கு நன்றி கூறியுள்ளார், “ இந்த ஆண்டு நீங்கள் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு! என் வாழ்க்கையில் வண்ணம் சேர்த்ததற்கு நன்றி, என்னை இடைவிடாமல் சிரிக்க வைத்ததற்கு நன்றி, நீ நீயாக இருப்பதற்கு நன்றி என பதில் கொடுத்துள்ளார்.ல்

 

46

இவர்கள் இருவரும் இந்த பதிவை போட்டவுடன், பல பிரபலங்கள் பாலிவுட் பிரபலமான ஆயுஷ்மான் குரானா, காஜல் அகர்வால், ராஷி கண்ணா, சின்மயி உள்ளிட்ட பலர் தங்களுடைய கருத்தை பதிவு செய்து வருகிறார்கள்.

 

 

56

ரகுல் ப்ரீத் சிங் கடைசியாக வைஷ்ணவ் தேஜ் ஜோடியாக தெலுங்கில் வெளியான திரைப்படமான கொண்டா போலாம் படத்தில் நடித்திருந்தார்.

 

66

தமிழில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அயலான் படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் இந்தியன் 2 படமும் சில பிரச்சனை காரணமாக இன்னும் முடிவடையாமல் உள்ளது. இதை தமிவிர பல பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!

Recommended Stories