தமிழ் சினிமாவில், எத்தனை காமெடி நடிகைகள் வந்தாலும்... ஆச்சி மனோரமா அவர்களின் நடிப்புக்கு என்றுமே ஈடு இணை இல்லை. இவர் நடித்த ஒவ்வொரு படங்களிலும் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து நடிப்பார்.
தென்னிந்தியாவின் ஐந்து முதலமைச்சர்களுடன் நடித்த பெருமை இவர் ஒருவரையே சேரும். கா. ந. அண்ணாதுரை, மு. கருணாநிதி ஆகிய இருவரும் நாடக மேடைகளில் மனோரமாவுடன் நடித்திருக்கிறார்கள். தவிர ஜெயலலிதா மற்றும் ம. கோ. இராமச்சந்திரன் இவருடன் தமிழ்த் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்கள். மேலும் என். டி. ராமராவ் தெலுங்கு படங்களில் இவருடன் நடித்திருக்கிறார்.
மிழ்த் திரையுலகினராலும், தமிழ்த் திரைப்பட ரசிகர்களாலும் 'ஆச்சி' என அன்போடு அழைக்கப்படும் இவருடைய உண்மையான பெயர் கோபிசாந்தா.
தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ராஜமன்னார்குடியில் வசதியான குடும்பத்தில் பிறந்தார். இவரின் தந்தை ஒரு சாலை ஒப்பந்தக்காரராகப் பணியாற்றியவர். தந்தை காசியப்பன் கிளாக்குடையார் மனோரமாவின் தாயாா் ராமாமிா்தம் அவா்களின் தங்கையை இரண்டாம் தாரமாகத் திருமணம் புரிந்ததால். இதனை அடுத்து கணவருடன் ஏற்பட்ட மனகசப்பால் புறக்கணிக்கப்பட்ட இராமாமிருதம் அம்மாள் மனோரமவை அழைத்து கொண்டு காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூர் என்ற ஊருக்கு குடிபெயர்ந்தார்.
மனோரமாவை ஆறாம் ஆம் வகுப்பு வரை படித்தார். பெரிய குடும்பத்தில் பிறந்தாலும், தந்தையை விட்டு தாய் பிரிந்ததால் குடும்ப வறுமையின் காரணமாக பள்ளி படிப்பை தொடர முடியாத மனோரமா அங்குள்ள செட்டியார் வீடுகளில் வேலை செய்தும், தாயாருடன் பலகார வியாபாரம் செய்து வாழ்க்கையை ஊட்டினார்.
நடிப்பின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக தன்னுடைய 12 ஆவது வயதில் நடிப்புத் தொழிலில் இறங்கினார். "பள்ளத்தூர் பாப்பா" என சிறு வயதில் மனோரமா செல்லமாக அழைக்கப்பட்டார். நாடக இயக்குனர் திருவேங்கடம், ஆர்மோனியக் கலைஞர் தியாகராஜன் ஆகியோர் இவருக்கு "மனோரமா" எனப் பெயர் சூட்டினர் நாளடைவில் இதுவே அவரது பெயராகவும் மாறியது.
இவர் 1958 இல் தமிழ் படத்தில் ஒரு கதாநாயகி பங்கு கொண்ட வெள்ளி திரையில் நாடகங்களிலிருந்து இடம்பெயர்ந்தது மாலையிட்ட மங்கை கவிஞர் கண்ணதாசன் அவரது இந்த படத்தில் நகைச்சுவையாக நடிக்க வேண்டும் கொடுத்தார். அவர் கதாநாயகியாக நடித்த முதல் படம் 1963 கொஞ்சும் குமரி. பின்னர், அவர் 1960 முதல் நகைச்சுவை விஷயத்தில் அதிக கவனம் செலுத்தினார் நன்கு அறியப்பட்ட நகைச்சுவை நடிகர் நாகேஷுடன் அவருக்கு சமமான சவாலான பாத்திரங்களில் நடித்து அசத்தினார்.
நடிப்பை தானி பல தமிழ் படங்களில் பாடல்களும் பாடியுள்ளார், பெரும்பாலும் அவரே நடித்த திரைப்படங்களில் பின்னணி பாடினார். அவர் பாடிய முதல் பாடல் மகளே உன் சமத்து என்னும் திரைப்படத்தில் ஜி.கே. வெங்கடேஷ் இசையமைப்பில் உருவானது.
மனோரமா 1964 ஆம் ஆண்டில் தனது நாடகக் கம்பெனியைச் சேர்ந்த எஸ். எம். ராமநாதன் என்பவரைக் காதலித்துத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு பூபதி என்னும் மகன் பிறந்தார். 1966 ஆம் ஆண்டில் இராமநாதனுடன் மணமுறிப்புப் பெற்று, சென்னையில் தனியாக வாழ்ந்து வந்தார்.
மனோரமா தனது 78 ஆவது வயதில் 2015 அக்டோபர் 10 அன்று இரவு 11:00 மணியளவில் மாரடைப்பால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் காலமானார்.
சுமார் 5000-க்கும் மேற்பட்ட நாடகங்களிலும் 1000-திருக்கும் மேற்ப்பட்ட படங்களில் நடித்த ஆச்சி மனோரமாவின், ஜில் ஜில் ரமாமணி, உள்ளிட்ட பல கதாபாத்திரங்கள் இன்று வரை ரசிகர்கள் மனதை விட்டு நீங்காதவை.