தமிழ், தெலுங்கு, இந்தி என அணைத்து மொழிகளிலும் கலந்து கட்டி தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வருபவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.
இவரின் அழகுக்கும், கச்சிதமான உடல் கட்டுக்கும் கிறங்கி போகாத இளசுகள் இல்லை. அந்த அளவிற்கு பார்ப்பதற்கு செம்ம பிட்டாக இருக்கிறார்.
இவரை பார்க்கும் போது, இளம் பெண்கள் பலருக்கு அடி மனதில்... இவரை போல் எப்படி பளபளப்பு சருமத்தையும், சிக்கென உடல்கட்டையும் பெறுவது என்கிற ஆசை கூட வந்து போகலாம்.
இவருடைய அழகின் ரகசியம் குறித்து பேட்டி ஒன்றில் எழுப்பப்பட்ட கேள்விக்கு ரகுல் ப்ரீத் சிங் பதில் கூறியுள்ளார்.
இவர் சொல்லும் இந்த டிப்சுகளை யார் வேண்டுமானாலும் கடைபிடிக்கலாம்.
அதாவது, ரகுல் ப்ரீத் சிங்.. காலையில் எழுந்ததும் வேர்த்து சொட்ட சொட்ட உடல் பயிற்சி மேற்கொள்வாராம். காலையில் 4 மணிக்கு ஷூட்டிங் என்றால் கூட உடல் பயிற்சி செய்யாமல் வீட்டை விட்டு போக மாட்டாராம்.
அதே போல், எத்தனையோ விதமான பேஸ் கிரீம், பேஸ் பேக் இருந்தாலும், அடிக்கடி வீட்டில் உள்ள தயிர், பழங்கள் போன்றவற்றை கொண்டு, பேஸ் பேக் போட்டு கொள்வது தான் தன்னுடைய அழகின் ரகசியம் என தெரிவித்துள்ளார். முடிந்தால் நீங்களும் வீட்டில் இதனை செய்து பாருங்கள்.