இதுதான் உண்மையான காதலின் வெற்றி..! மனைவியின் புகைப்படத்தை வெளியிட்டு கவி பாடும் ரக்ஷன்!

First Published | Feb 17, 2021, 7:11 PM IST

ரக்ஷன் தன்னுடைய மனைவியின் சமீபத்திய புகைப்படத்தை வெளியிட்டு... காதல் தத்துவம் கூடியுள்ளார். இந்த போஸ்ட் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'கலக்க போவது யாரு' மற்றும் 'குக் வித்' கோமாளி ஆகிய நிகழ்ச்சியில் தொகுப்பாளராக கலக்கி வருபவர் ரக்ஷன்.
தொகுப்பாளினி ஜாக்குலினுடன் இவர் தொகுத்து வழங்கிய கலக்க போவது சீசன்களுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.
Tap to resize

தற்போது இருவருமே சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என மாறி மாறி நடிப்பில் கலக்கி வருகிறார்கள்.
ரக்சன் துல்கர் சல்மான் நடிப்பில் அறிமுக இயக்குனர் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் உருவாக உள்ள 'கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்' படத்தில் இரண்டாவது ஹீரோவுக்கு இணையான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவருடைய நடிப்புக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
விஜய் டிவி தொலைகாட்சியில் இருந்து, ஏற்கனவே சந்தானம், சிவகார்த்திகேயன், மா.கா.பா, ஜெகன் உள்ளிட்ட பிரபலங்கள் வெள்ளித்திரையில் கால் பதித்து பிரபலமாகியுள்ள நிலையில் தற்போது ரக்சன்னும் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவருக்கு திருமணம் ஆன தகவல் இதுவரை வெளியாகாத நிலையில், தற்போது முதல் முறையாக தன்னுடைய மனைவியுடன் வெளியிட்டுள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
மேலும் இவருக்கு சமீபத்தில் தான் குழந்தை பிறந்த தகவலும், குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் தெரியவந்தது. ஒருவழியாக ரக்ஷன் பொத்தி பொத்தி வைத்திருந்த தகவல்கள் வெளியாகவே, தற்போது மனைவியின் புகைப்படத்தை வெளியிட்டு காதல் ரசம் சொட்ட சொட்ட வரிகளை போஸ்ட் செய்துள்ளார்.
“தினமும் ஸ்டேட்டஸில் எப்படிக் காதலிக்கிறோம் என்று சொல்வதை விட எப்படி காதலித்தோம் என அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்ததே உண்மையான காதலின் வெற்றி” என்று எழுதப்பட்ட கார்டை ரக்‌ஷன் பகிர்ந்திருக்கிறார்.

Latest Videos

click me!