லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உலகம் முழுவதும் நேற்று வெளியாக கூலி திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. நடிகர் ரஜினிகாந்த் சினிமாவில் ஐம்பது ஆண்டுகளைக் கடந்த வெற்றிகரமான நடிகராக ரஜினிகாந்த் உடன் முதன்முறையாக இணைந்த படம் தான் கூலி. இப்படத்தில் பல்வேறு மொழிகளைச் சேர்ந்த பிரபல நடிகர்கள் நடித்துள்ளனர். இதில் ஆமீர் கானின் சிறப்புத் தோற்றமும் இடம் பெற்றுள்ளது. சராசரி சினிமா ரசிகர்களுக்கு இதுவே போதுமானது.
24
மாஸ் காட்டியுள்ள அனிருத்
அமீர்கான், ஸ்ருதிஹாசன், சத்யராஜ், நாகர்ஜுனா, உபேந்திரா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் வழக்கம் போல தனது பாணியில் மாஸாக இசையமைத்துள்ளார்.
34
கூலி முதல் நாள் வசூல்
இப்படம் முதல் நாள் வசூல் தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி தமிழகத்தில் இப்படம் ரூ.30 கோடியை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இந்திய அளவில் ரூ.65 கோடியும், வெளிநாடுகளில் ரூ.75 கோடியையும் வசூல் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
அதன்படி முதல் நாளில் கூலி ரூ.140 கோடியை வசூல் செய்துள்ள நிலையில், அடுத்த 3 நாட்களும் விடுமுறை தினம் என்பதால் படத்தின் வசூல் வெகுவாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.