கமல்ஹாசன் vs ரஜினிகாந்த்! தீபாவளி ரேஸில் அதிக ஹிட் கொடுத்தது யார்?

First Published Oct 23, 2024, 1:24 PM IST

Rajinikanth vs Kamalhaasan : தீபாவளி பண்டிகைக்கு ரிலீஸ் ஆன கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்தின் படங்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
 

Rajinikanth vs Kamalhaasan

கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் தமிழ் சினிமாவில் இரு பெரும் துருவங்களாக இருந்தாலும் நிஜத்தில் அவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருக்கிறார்கள். அவர்கள் இருவரது படங்களும் போட்டிபோட்டு ரிலீஸ் ஆவதுண்டு. அப்படி கமல், ரஜினி படங்கள் தீபாவளிக்கு போட்டி போட்டு ரிலீஸ் ஆனது எப்போது, அதில் யாருக்கு அதிகம் வெற்றி கிடைத்தது என்பது பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

Diwali Release Movies

நடிகர் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர் இதுவரை 7 முறை தீபாவளி ரேஸில் நேருக்கு நேர் மோதி உள்ளனர். இதுதவிர இவர்கள் இருவரும் இணைந்து நடித்த மூன்று முடிச்சு, அவள் அப்படித்தான், 16 வயதினிலே போன்ற படங்களும் தீபாவளி விருந்தாக வெளியாகி மாபெரும் வெற்றி பெற்று இருந்தன. கமலும் ரஜினியும் முதன்முதலில் தீபாவளி ரேஸில் நேருக்கு நேர் மோதியது 1983-ம் ஆண்டு தான். அந்த ஆண்டு கமல் நடித்த தூங்காதே தம்பி தூங்காதே, ரஜினிகாந்தின் தங்கமகன் ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகின.

Latest Videos


Diwali Release Movies

இதில் இரண்டு படங்களுமே சக்கைப்போடு போட்டன. ஆனால் தங்கமகன் படத்தைவிட தூங்காதே தம்பி தூங்காதே படம் தான் அதிக நாட்கள் ஓடி சாதனை படைத்தது. அடுத்தபடியாக 1986-ம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்த மாவீரன் படத்துக்கு போட்டியாக கமல்ஹாசனின் புன்னகை மன்னன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இதில் மாவீரன் படத்தை காட்டிலும் கமல்ஹாசனின் புன்னகை மன்னன் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

இதையும் படியுங்கள்... இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸ் ஆகவுள்ள திரைப்படங்கள்

Diwali Release Movies

அடுத்ததாக 1987-ம் ஆண்டு கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவான மாஸ்டர் பீஸ் படமான நாயகனும், ரஜினிகாந்தின் மனிதன் படமும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆனது. இதில் விமர்சன ரீதியாக நாயகன் வென்றாலும், வசூலில் மனிதன் படம் தான் டாப்பில் இருந்தது. பின்னர் 1989-ம் ஆண்டு கமல்ஹாசனின் வெற்றி விழா மற்றும் ரஜினி நடித்த மாப்பிள்ளை ஆகிய திரைப்படங்கள் தீபாவளிக்கு திரைக்கு வந்தன. இந்த ரேஸில் ரஜினி தான் வெற்றி பெற்றார்.

Diwali Release Movies

பின்னர் 1991-ம் ஆண்டு ரஜினிகாந்தின் தளபதி படமும், கமல்ஹாசன் ஹீரோவாக நடித்த குணா படமும் திரையரங்குகளில் தீபாவளி விருந்தாக வந்தன. இந்த ரேஸில் குணா படத்தை வாஷ் அவுட் செய்து வெற்றிவாகை சூடினார் ரஜினிகாந்த். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக 1992-ம் ஆண்டு தீபாவளிக்கு ரஜினியின் பாண்டியன் படத்துடன் மோதிய கமல்ஹாசனின் தேவர் மகன் திரைப்படம் பட்டிதொட்டியெங்கும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

Diwali Release Movies

கடைசியாக கமலும் ரஜினியும் தீபாவளி ரேஸில் மோதிக்கொண்டது 1995-ம் ஆண்டு தான். அந்த ஆண்டு கமல்ஹாசன் நடித்த குறுதிப்புனல் படமும் ரஜினிகாந்தின் முத்து படமும் போட்டிபோட்டு ரிலீஸ் ஆனது. இந்த ரேஸில் முத்து படத்துக்கே பாக்ஸ் ஆபிஸில் வெற்றி கிட்டியது. இதன்மூலம் தீபாவளி ரேஸில் அதிக வெற்றிகளை பெற்றதில் கமலை விட ரஜினி தான் டாப்பில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... ஒன்னில்ல ரெண்டில்ல மொத்தம் 11 படம்; தீபாவளிக்கு அதிக படங்கள் ரிலீஸ் ஆனது எந்த வருடம் தெரியுமா?

click me!