பாக்ஸ் ஆபிஸ் ‘பாட்ஷா’ ரஜினிகாந்த் நடித்து அதிக வசூல் அள்ளிய டாப் 7 மூவீஸ் ஒரு பார்வை

Published : Dec 09, 2025, 03:26 PM IST

கோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது சினிமா வாழ்க்கையில் பல பிளாக்பஸ்டர் படங்களில் நடித்துள்ளார். அந்தப் படங்கள் எவை என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம். 

PREV
17
பேட்ட

ரஜினிகாந்தின் 'பேட்ட' திரைப்படம் 2019ல் வெளியானது. ரூ.135 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் ரூ.223 கோடி வசூலித்தது. இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருந்தார். இப்படத்தில் ரஜினிகாந்த் உடன் சிம்ரன், விஜய் சேதுபதி, நவாசுதீன் சித்திக், மாளவிகா மோகனன் ஆகியோர் நடித்திருந்தனர்.

27
வேட்டையன்

'வேட்டையன்' திரைப்படம் 2024ல் வெளியானது. ரூ.200 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.255 கோடி வசூல் செய்தது. த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவான இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து இருந்தது. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இதில் ரஜினிக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்தார்.

37
எந்திரன்

ரஜினிகாந்தின் 'எந்திரன்' 2010ல் வெளியானது. ரூ.130 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.290 கோடி வசூலித்தது. பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இப்படத்தை இயக்கி இருந்தார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. இதில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடித்தார்.

47
கபாலி

2016ல் வெளியான ரஜினிகாந்தின் 'கபாலி' திரைப்படம் ரூ.120 கோடி பட்ஜெட்டில் தயாராகி, ரூ.295 கோடி வசூல் செய்தது. இப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்தார். இப்படத்தில் ரஜினி உடன் கலையரசன், ரித்விகா, தன்ஷிகா, ராதிகா ஆப்தே போன்றோர் நடித்தனர்.

57
கூலி

ரஜினிகாந்தின் 'கூலி' படத்தின் பட்ஜெட் சுமார் ரூ.350-400 கோடி. இப்படம் ரூ.517-518 கோடி வசூல் செய்தது. இப்படம் 2025ல் வெளியானது. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். இதில் பான் இந்தியா நட்சத்திரங்களான நாகர்ஜுனா, செளபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், உபேந்திரா, அமீர்கான் ஆகியோர் நடித்திருந்தனர்.

67
ஜெயிலர்

2023ல் வெளியான 'ஜெயிலர்' திரைப்படம் ரூ.180 கோடி பட்ஜெட்டில் தயாராகி, ரூ.605 கோடி வசூல் சாதனை படைத்தது. சன் பிக்சர்ஸ் தயாரித்த இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி இருந்தார். இப்படத்தில் ரஜினியின் மனைவியாக ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார்.

77
2.0

2018ல் வெளியான '2.0' ரஜினியின் சினிமா வாழ்க்கையில் அதிக வசூல் செய்த படம். ரூ.540 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.675 கோடி வசூல் செய்தது. இப்படத்தை ஷங்கர் இயக்கி இருந்தார். இதில் ரஜினிக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடித்தார். அக்‌ஷய் குமார் வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டி இருந்தார்.

Read more Photos on
click me!

Recommended Stories