இளையராஜாவின் புதிய ஸ்டுடியோவிற்கு விசிட் அடித்த சூப்பர்ஸ்டார்! நீண்ட நாட்களுக்கு பின் கிடைத்த தலைவர் தரிசனம்!

First Published | Feb 16, 2021, 7:28 PM IST

இளையராஜாவின் புதிய ஸ்டுடியோவுக்கு... சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திடீர் விசிட் அடித்துள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. 

சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் பல ஆண்டுகளாக இளையாராஜா இசையமைத்து வந்தார் என்பது அனைவரும் அறிந்தது தான். அங்கு அவருக்கென தனி அறையுடன் கூடிய ரெக்காடிங் ஸ்டூடியோ இருந்தது. அந்த ஸ்டூடியோவில் இருந்து இளையராஜாவை பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம் வெளியேற்றியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. திரைப்பிரபலங்கள் பலரும் வாசலில் நின்று போராட்டம் நடத்தியும், பிரசாத் ஸ்டூடியோ தங்களுடைய முடிவில் இருந்து பின்வாங்கவில்லை.
பிரசாத் ஸ்டூடியோவில் அவர் பயன்படுத்திய அறையே இல்லை என்றும், பொருட்கள் அனைத்தும் குடோனில் தூக்கி வீசப்பட்டு சேதமடைந்துள்ளதாகவும் கேள்விப்பட்டு இசைஞானி மன உளைச்சலுக்கு ஆளானர். தன்னுடைய அறையே இல்லாத போது அங்கு சென்று என்ன செய்யப்போகிறேன் என பிரசாத் ஸ்டூடியோ செல்லும் திட்டத்தையே கைவிட்டார். அதன் பின்னர் சொந்தமாக ஸ்டூடியோ ஒன்றை அமைத்தார்.
Tap to resize

அதன்படி, கோடம்பாக்கத்தில் உள்ள பழைய எம்.எம். தியேட்டரை வாங்கி தனக்கான ஸ்டூடியோவாக மாற்றி இருக்கிறார். அதற்கான பூஜை பிப்ரவரி 3 ஆம் தேதி போடப்பட்டு, இளையராஜாவின் புதிய ஸ்டூடியோவும் உதயமானது. இந்த ஸ்டுடியோவில் முதன் முதலாக வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்திற்கான இசை வேலைகளை சிறப்பாக துவங்கினார்.
இந்நிலையில், இளையராஜாவின் புதிய ஸ்டுடியோவுக்கு... சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திடீர் விசிட் அடித்துள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பல வெற்றி பாடல்களை கொடுத்துள்ள, தன்னுடைய நண்பரான இளையராஜாவின் புதிய ஸ்டுடியோவுக்கு ரஜினிகாந்த் சென்று அவருடன் பலமணி நேரம் பேசியுள்ளார்.
நேற்றைய தினம், இளையராஜாவின் தி.நகர் வீட்டிற்கு சென்ற ரஜினிகாந்த், இளையராஜின் வரவேற்பை ஏற்று அவர் புதிதாக கட்டியுள்ள ஸ்டுடியோவுக்கு விசிட் அடித்துள்ளார்.
'அண்ணாத்த' படப்பிடிப்பில் இருந்து, வந்த பின்னர் ரசிகர்கள் மத்தியில் தலை காட்டாமல் இருந்த சூப்பர் ஸ்டார் நீண்ட நாட்களுக்கு பின் தற்போது ரசிகர்களுக்கு தரிசனம் கொடுத்துள்ளார்.

Latest Videos

click me!