40 வயதில் இரண்டாம் திருமணம் செய்து கொண்ட... கெளதம் மேனன் பட நடிகை..! வைரலாகும் புகைப்படம்..!

First Published | Feb 16, 2021, 7:00 PM IST

பிரபல இயக்குனர் கெளதம் மேனன் இயக்கிய படத்தில் ஹீரோயினாக நடித்த, நடிகை தன்னுடைய 40 ஆவது வயதில் இரண்டாவது திருமண வாழ்க்கையில் இணைந்துள்ளார். இவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
 

இயக்குனர் கெளதம் மேனன், தமிழில் முதல் முறையாக இயக்கி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் 'மின்னலே'. இந்த படத்தை ஹிந்தியிலும் இவரே ரீமேக் செய்திருந்தார். ஹிந்தி ரீமேக்கில், ரீமாசென் நடித்த வேடத்தில் நடித்திருந்தனர், தியா மிர்சா.
இவர், தமிழில் நடிகர் அரவிந்த் சுவாமி நடிப்பில் வெளியான 'என் சுவாச காற்றே படத்தில் டான்சராக சில காட்சிகளில் மட்டுமே நடித்திருந்தார். பல பாலிவுட் படங்களில் நடித்து மிகவும் பிரபலமான தியா மிர்சா, தற்போது வெப் சீரிஸ் போன்றவற்றில் கவனம் செலுத்தி வருகிறார்.
Tap to resize

தியா மிர்சாவிற்கு ஏற்கனவே கடந்த 2014 ஆம் ஆண்டு சாஹில் சங்கரா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும், கடந்த 2019 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
இதை தொடர்ந்து நேற்று தியா மிர்சா மும்பை தொழிலதிபர் வைபவ் ரேகி என்பவரை தன்னுடைய 40 வயதில் திருமணம் செய்து கொண்டுள்ளார். இதுகுறித்த புகைப்படங்களை தியா வெளியிட, ரசிகர்கள் தொடர்ந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Latest Videos

click me!