அச்சச்சோ... விஜய்க்கு நடந்தது இப்போ ரஜினிக்கும் நடக்குதே... கடும் அப்செட்டில் நெல்சன்

First Published | Aug 28, 2022, 10:44 AM IST

Jailer : ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு தற்போது எண்ணூர் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. அங்கு ரஜினி நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. 

வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் வாரிசு. தில் ராஜு தயாரிக்கும் இப்படம் வருகிற 2023-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீசாக உள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த சில வாரங்களாக வாரிசு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் லீக் ஆகி வந்தன.

இதனால் அப்செட்டான இயக்குனர், படக்குழுவுக்கு அதிரடி உத்தரவுகள் சிலவற்றையும் பிறப்பித்ததாக கூறப்பட்டது. ஆனால் அதன் பின்னர் இந்த சம்பவம் தொடர்ந்தது. கடந்த வாரம் கூட நடிகர் விஜய்யும், நடிகை ராஷ்மிகா மந்தனாவும் ஜோடியாக நடனம் ஆடும் 30 விநாடி காட்சிகள் லீக் ஆகி பேரதிர்ச்சியை கொடுத்தது.

இதையும் படியுங்கள்... திருமண நாளன்று மனைவியுடன் ஜோடியாக போட்டோஷூட் நடத்திய சிவகார்த்திகேயன் - வைரலாகும் கியூட் கிளிக்ஸ்

Tap to resize

இந்நிலையில், தற்போது அதே பிரச்சனை ரஜினியின் ஜெயிலர் படத்துக்கும் நடந்துள்ளது. நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ஜெயிலர். ரஜினி ஹீரோவாக நடித்து வரும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் 22-ந் தேதி பூஜையுடன் தொடங்கியது.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது எண்ணூர் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. ரஜினி நடிக்கும் காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஷூட்டிங்கின் போது எடுத்த புகைப்படம் ஒன்று லீக் ஆகி உள்ளது. இதனால் ஜெயிலர் படக்குழு கடும் அப்செட்டில் உள்ளதாம். வாரிசு படத்துக்கு வந்த அதே நிலைமை தற்போது ஜெயிலர் படத்துக்கும் வந்துள்ளது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படியுங்கள்... எதிர்பார்ப்பை எகிற வைத்த 'பகாசூரன்' செகண்ட் லுக்! நட்டியின் தோற்றம் வெளியானது..!

Latest Videos

click me!