பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் சிவா மற்றும் அவரது மகன்கள் ஹெவின் மற்றும் ஸ்டீபன் ஆகிய மூவரும் இணைந்து இந்த படத்திற்கு ஆக்சன் சீக்வென்சை இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.இதற்கான புகைப்படத்தில் ஸ்டன்ட் மாஸ்டர்கள் மற்றும் இயக்குனர் நெல்சன் இடம் பெற்றுள்ளார்.
ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக ஐஸ்வர்யாராய் நடிக்க இருப்பதாகவும் பிரியங்கா மோகன் முக்கிய ரோலில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. படையப்பாவில் நடித்த ரம்யா கிருஷ்ணன் 20 வருடங்களுக்குப் பிறகு இந்த படத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.