அமிதாப் பச்சனுக்கு கொரோனா... செய்தியைக் கேள்விப்பட்டதும் ரஜினி, கமல் என்ன செய்தார்கள் தெரியுமா?

First Published Jul 12, 2020, 2:07 PM IST

பாலிவுட்டின் முன்னணி நடிகரான அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தனது நண்பரின் உடல் நலக்குறைவு குறித்து கேள்விப்பட்ட ரஜினிகாந்த், கமல் ஹாசன் என்ன செய்தார்கள் என்பதை தெரிந்துகொள்ளலாம். 

பாலிவுட்டி பிதா மகன் அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.அமிதாப் பச்சனுக்கு அறிகுறிகள் தென்பட்டதை தொடர்ந்து அவரது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
undefined
இதையடுத்து எம்.பி ஜெயா பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் ஆகியோருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது.அதில் அபிஷேக் பச்சனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
undefined
ஆனால் ஐஸ்வர்யா ராய், ஜெயா பச்சன் ஆகியோருக்கு தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தந்தை, மகன் இருவரும் மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
undefined
பாலிவுட்டின் டாப் ஸ்டார் குடும்பத்திற்குள் கொரோனா நுழைந்தது இந்தி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த செய்தி ரசிகர்களையும் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
undefined
அமிதாப் பச்சனும், அபிஷேக் பச்சனும் உடல் நலம் பெற வேண்டுமென திரைத்துறை பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் பிரார்த்தனை செய்து கொள்வதாக ட்வீட் செய்து வருகின்றனர்.
undefined
தமிழ் திரையுலகின் ஜாம்பவான்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல் ஹாசன் இருவருமே அமிதாப் பச்சனுக்கு நெருங்கிய நண்பர்கள். அமிதாப்பிற்கு கொரோனா தொற்று ஏற்பட்ட செய்தியைக் கேள்விப்பட்டு இருவரும் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.
undefined
தன் நண்பருடைய நிலையை கேள்விப்பட்ட ரஜினிகாந்த் உடனடியாக அமிதாப் பச்சனுக்கு போன் செய்து நலம் விசாரித்துள்ளார். அதுமட்டுமின்றி விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்புவீர்கள் என நம்பிக்கை அளித்துள்ளார்.
undefined
அதேபோல் உலக நாயகன் கமல் ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில், “அமிதாப் பச்சனும் அவருடைய மகனான அபிஷேக் பச்சனும் கொரோனாவில் இருந்து விரைவில் மீண்டு வர வேண்டும். நான் இந்திய மருத்துவர்களை நம்புகிறேன். இருவரும் மீண்டும் நல்ல உடல் நிலையுடன் தேறி வலம் வந்து சாதனையாளர்கள்” என்பதை நிரூபிப்பார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
undefined
click me!