Coolie: ரஜினிகாந்த், கலாநிதி மாறன் ஷாக்..! 'கூலி' வெளியாகி 7 மணி நேரம் கூட ஆகல..! அதுக்குள்ள இப்படியா!

Published : Aug 14, 2025, 03:48 PM IST

கூலி திரைப்படம் வெளியாகி 7 மணி நேரமே ஆன நிலையில், ரஜினிகாந்த், கலாநிதி மாறன் அதிர்ச்சி அடையும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

PREV
14
Rajinikanth Coolie Movie Released On Torrent Websites

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் நடிப்பில் 'கூலி' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த்துடன் அமீர்கான், நாகர்ஜூனா, உபேந்திரா, சத்யராஜ் என முன்னணி நடிகர்களும் நடித்துள்ளனர். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் வடமாநிலங்களில் வெளியாகியுள்ள கூலி திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

24
கூலி திரைப்படம் எப்படி இருக்கு?

நண்பனை கொன்றவர்களை பழிவாங்கும் வழக்கமான கதையாக கூலியின் கதைக்கரு அமைந்துள்ளது. ரஜினி ரசிகர்கள் இப்படத்தை ஆகா, ஓகோ என்று கொண்டாடினாலும் பொதுவான ரசிகர்கள் கூலியை அவ்வளவாக ரசிக்கவில்லை. திரைக்கதை சற்று பலவீனமாக இருப்பதாகவும், இரண்டாம் பாதி இழுவையாக இருப்பதாகவும் பலரும் தெரிவித்து வருகின்றனர். அதே வேளையில் இந்த வயதிலும் ரஜினிகாந்த்தின் துறு துறு நடிப்பை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

ரீலீசுக்கு முன்பே கூலி முன்பதிவில் சாதனை

இப்படியாக கூலி திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், இப்படம் வெளியாகியுள்ள அனைத்து மாநிலங்களிலும் தியேட்டர்கள் ஹவுஸ்புல் ஆக உள்ளன. நாளை முதல் 3 நாட்கள் தொடர் விடுமுறை உள்ள நிலையில், முன்னணி தியேட்டர்களில் அனைத்து காட்சிகளும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. ரீலீசுக்கு முன்பே முன்பதிவில் இப்படம் பல சாதனைகளை படைத்திருந்தது. அதாவது உலகளவில் ரூ. 112.80 கோடிக்கு மேல் முன்பதிவில் வசூலித்துள்ளது.

34
இணையத்தில் வெளியான கூலி திரைப்படம்

இந்தியா முழுவதும் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வருவதால் கூலி வசூல் வேட்டை நடத்தும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், வெளியான சில மணிநேரங்களிலேயே கூலி திரைப்படம் முழுவதும் டோரண்ட் இணையதளங்களில் கசிந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கூலி படத்தின் HD பிரிண்டுகள் தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட பல்வேறு டோரண்ட் இணையதளங்களில் இலவசமாக பதிவிறக்கம் செய்ய கிடைப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

44
ரஜினி, கலாநிதி மாறன் அதிர்ச்சி

இதனால் கூலி நாயகன் ரஜினிகாந்த், தயாரிப்பாளர் கலாநிதி மாறன் மற்றும் படக்குழுவினர் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பைரசி எனப்படும் சட்டவிரோத இணையதளங்களில் கூலி படத்தை வெளியிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் படம் வெளியாவதற்கு முன்பே எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால் அதையும் மீறி சட்டவிரோதமாக கூலி திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

திரைத்துறையினர் கோரிக்கை

தமிழ்நாட்டில் ஒவ்வொரு படங்கள் வெளியாகும்போதும் குறிப்பாக ரஜினி, அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும்போது ரிலீசான சில மணி நேரங்களில் இணையதளங்களில் வெளிவந்து விடுகிறது. இதனைத் தடுக்க அரசோ அல்லது நீதிமன்றமோ கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திரைத்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read more Photos on
click me!

Recommended Stories