சென்னை குரோம்பேட்டையில் உள்ள வெற்றி திரையரங்கில் கூலி திரைப்படம் பார்த்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அஜித்துடன் இணைவது பற்றி மாஸ் அப்டேட் கொடுத்துள்ளார்.
மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என வரிசையாக ஐந்து மாஸ் ஹிட் படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக இயக்கியுள்ள படம் தான் கூலி. ரஜினிகாந்த் உடன் முதன்முறையாக கூட்டணி அமைத்து அவர் இயக்கியுள்ள படம் இது என்பதால் இதற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. இத்தனை எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கூலி திரைப்படம் இன்று உலகமெங்கும் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது. இப்படத்தின் வெளியீட்டால் இன்று திரையரங்குகள் முழுவதும் திருவிழாக்கோலம் பூண்டுள்ளன. ரசிகர்கள் தடபுடலாக கொண்டாடி வருகின்றனர்.
24
கூலி படம் பார்த்த லோகேஷ்
கூலி படம் ரிலீஸ் ஆன நிலையில், அப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக ரஜினி ரசிகர்களுக்கு இப்படம் செம ட்ரீட் ஆக அமைந்துள்ளது. கூலி படத்தின் பர்ஸ்ட் ஷோ தமிழ்நாட்டில் இன்று காலை 9 மணிக்கு திரையிடப்பட்டது. இப்படத்தை பார்க்க ரசிகர்கள் மட்டுமின்றி படத்தில் பணியாற்றியவர்களும் ஆர்வமாக இருந்தனர். அந்த வகையில் கூலி திரைப்படத்தை சென்னை குரோம்பேட்டையில் உள்ள வெற்றி தியேட்டரில் ரசிகர்களுடன் பார்த்து ரசித்தார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அவருடன் இசையமைப்பாளர் அனிருத், நடிகை ஸ்ருதிஹாசன் ஆகியோரும் கூலி படத்தை கண்டுகளித்தனர்.
34
அஜித்துடன் எப்போ கூட்டணி?
படம் முடித்து வெளியே வந்த லோகேஷ் கனகராஜ் பத்திரிகையாளர்களை சந்தித்தார். படத்திற்கு ரசிகர்கள் கொடுக்கும் ரெஸ்பான்ஸால் சந்தோஷமாக இருப்பதாக கூறியுள்ள அவர், தொடர்ந்து மற்ற திரையரங்குகளுக்கும் சென்று ரசிகர்களை சந்திக்க இருப்பதாக கூறினார். அதேபோல் விஜய், கமல், அஜித் போன்ற முன்னணி நடிகர்களை வைத்து படம் பண்ணிய நீங்க, அஜித்துடன் எப்போ படம் பண்ணுவீங்க என பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு, எப்போ வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போ கண்டிப்பா பண்ணுவேன். அவருடன் படம் பண்ண எனக்கும் ஆசை தான் என கூறி உள்ளார்.
லோகேஷ் கனகராஜின் இந்த மாஸ் பதிலால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். சீக்கிரமே அஜித் - லோகேஷ் கூட்டணி உருவாக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. ஆனால் அதற்கு முன்னர் கைதி 2, விக்ரம் 2 என லோகேஷ் கனகராஜ் கைவசம் ஏராளமான படங்கள் உள்ளன. அதையெல்லாம் முடித்த பின்னரே அவர் அஜித் படத்தை இயக்க முடியும் என்பதால், இந்த கூட்டணிக்காக இன்னும் சில ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.