நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்ட கலைஞனாக வலம் வருபவர் ராகவா லாரன்ஸ். இவர் நடிப்பில் தற்போது ஜிகர்தண்டா 2 திரைப்படம் உருவாகி உள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் லாரன்ஸ். ஜிகர்தண்டா முதல் பாகத்திலேயே லாரன்ஸை தான் அசால்ட் சேதுவாக நடிக்க வைக்க இருந்தாராம் கார்த்திக் சுப்புராஜ்.
24
Jigarthanda double X
அந்த சமயத்தில் வேறு சில படங்களில் பிசியாக இருந்ததால், அவருக்கு பதில் பாபி சிம்ஹாவை நடிக்க வைத்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ். முதல் பாதி பயங்கர ஹிட் ஆன நிலையில், தற்போது அதன் இரண்டாம் பாதியில் நடிக்க கமிட்டாகி வெற்றிகரமாக நடித்து முடித்துள்ளார். ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் வருகிற நவம்பர் 10-ந் தேதி தீபாவளி விருந்தாக திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ரிலீஸுக்கு இன்னும் ஒரு வாரமே எஞ்சி உள்ளதால், அதன் புரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அப்படத்திற்காக அளித்த பேட்டி ஒன்றில் காஞ்சனா 2 படம் பற்றிய ஆச்சர்ய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார் லாரன்ஸ். அதன்படி காஞ்சனா 2 படத்தில் ரஜினியை தான் ஹீரோவாக நடிக்க வைக்க திட்டமிட்டு இருந்தாராம்.
44
Raghava Lawrence about Kanchana 2
அதற்கான பேச்சுவார்த்தை நடந்து கிட்டத்தட்ட உறுதியாக இருந்த சூழலில் தன் முடிவை மாற்றிவிட்டாராம் லாரன்ஸ். ஏனெனில் அப்படத்தில் ஹீரோ தன் தாயின் இடுப்பில் உட்காருவது போன்ற காட்சிகள் இருக்கும், அது ரஜினிக்கு செட் ஆகாது என்பதால் அவரை நடிக்க வைக்க வேண்டும் என்கிற முடிவில் இருந்து பின்வாங்கிவிட்டதாக லாரன்ஸ் கூறி உள்ளார்.
இதைப்பார்த்த நெட்டிசன்கள் லாரன்ஸின் இந்த முடிவு கரெக்டானது தான் என கூறி வருகின்றனர். ரஜினியை ரிஜெக்ட் பண்ணியபின் அந்த கேரக்டரில் தானே நடித்தார் லாரன்ஸ். அப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தது குறிப்பிடத்தக்கது.