Rajinikanth Salary : ரூ.100 கோடி பத்தாது... ஜெயிலர் படத்துக்காக சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்திய ரஜினி

First Published | Jun 20, 2022, 2:00 PM IST

Rajinikanth Salary : ஜெயிலர் படத்துக்காக நடிகர் ரஜினிகாந்த் வாங்க உள்ள சம்பளம் குறித்த தகவல் வெளியாகி கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அண்ணாத்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதன் காரணமாக தனது அடுத்த படத்தில் நிச்சயம் ஹிட் கொடுக்க வேண்டும் என்கிற கட்டாயத்தில் இருக்கிறாராம் ரஜினி. இதற்காக அவர் தேர்ந்தெடுத்த இயக்குனர் நெல்சன், இவர் இயக்கத்தில் அண்மையில் வெளிவந்த பீஸ்ட் படம் படுதோல்வியை சந்தித்தது.

நெல்சனும் ரஜினி படம் மூலம் கம்பேக் கொடுக்க வேண்டும் என்கிற முனைப்புடன் படு பிசியாக வேலை செய்து வருகிறாராம். நெல்சன் - ரஜினி கூட்டணியில் உருவாகும் படத்துக்கு ஜெயிலர் என பெயரிடப்பட்டு உள்ளது. அதிரடி ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாக உள்ள இதில் நடிகர் ரஜினிகாந்த் ஜெயில் வார்டனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Tap to resize

ஜெயிலர் படத்தின் நடிகர், நடிகைகள் தேர்வு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வருகிற ஆகஸ்ட் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு உள்ளனர். இந்நிலையில் ஜெயிலர் படத்துக்காக நடிகர் ரஜினிகாந்த் வாங்க உள்ள சம்பளம் குறித்த தகவல் வெளியாகி கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதன்படி ஜெயிலர் படத்துக்காக ரஜினி ரூ.151 கோடி சம்பளமாக பேசி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார். முன்னதாக இவர் நடிப்பில் வெளியான அண்ணாத்த படத்தில் நடிக்க ரஜினிக்கு ரூ.100 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்ட நிலையில், தற்போது அதனை மளமளவென உயர்த்தி உள்ளார்.

இதையும் படியுங்கள்... Vijay Babu Case : பாலியல் புகாரை வாபஸ் பெற ஒரு கோடி பேரம்... விஜய் பாபு மீது நடிகை பகீர் புகார்

Latest Videos

click me!