அதனடிப்படையில் பாதிக்கப்பட்ட ரசிகர்களின் குடும்ப சூழலுக்கு ஏற்றவாறு தேர்ந்தெடுக்கப்பட்ட நலத்திட்ட உதவிகளுள் ரஜினிகாந்த் அன்பு இல்லம் எனும் பெயரில் கான்கிரீட் தளத்துடன் வீடும், வாழ்வாதாரம் இன்றி தவித்து வந்தவர்களுக்கு பங்க் அமைத்து தருதல், கணவனால் கைவிடப்பட்டு வருவாய் இன்றி தவித்து வந்த பெண்களுக்கு வீட்டிலிருந்தபடியே வருவாய் ஈட்ட தேவையான ஊதுவத்தி தயாரிக்கும் இயந்திரம், இட்லி மாவு இயந்திரம், தையலியந்திரம் உள்ளிட்டவைகளும், மேற்படிப்பு படிக்க இயலாமல் தவித்து வந்த மாணவர்களுக்கு முழு கல்விக்கான நிதியும், உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்கான நிதியும், ஏழ்மையில் தவித்து வந்த குடும்ப தலைவிகளுக்கு குடிசை தொழில் தொடங்க நிதியும், மாற்றுத்திறனாளி ரசிகர்களுக்கு மூன்று சக்கர மோட்டார் வாகனங்களும் வழங்கப்பட்டது.