14 வயத்தில் மகள்... திருமணம் ஆகி 17 வருடத்திற்கு பின் இரண்டாவது குழந்தைக்கு அப்பாவான நடிகர் 'பக்ரு'!

First Published | Mar 26, 2023, 4:01 PM IST

நடிகர் பக்ரு, திருமணம் ஆகி 17 வருடத்திற்கு பின்னர் இரண்டாவது பெண் குழந்தைக்கு தந்தையாகியுள்ளார்.
 

நடிகர் கின்னஸ் பக்ருவிக்கு ஏற்கனவே 14 வயதில் மகள் ஒருவர் உள்ள நிலையில், தற்போது இரண்டாவது குழந்தைக்கு பக்ரு அப்பாவாகியுள்ளார். இதைத்தொடர்ந்து ரசிகர்கள் பலர் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
 

மலையாள திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக இருப்பவர் பக்ரு. இவரின் உண்மையான பெயர் அஜய் குமார் என்றாலும், கின்னஸ் பக்ரு என்றே ரசிகர்களாலும், திரையுலகினராலும் அறியப்படுகிறார். 2 அடி 6 அங்குலம் (76 செ.மீ) உயரம் கொண்ட இவர், ஒரு முழு நீள திரைப்படத்தில் நடித்த உயரம் குறைந்த நடிகர் என்பதற்காக, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.

கிழிந்த பேன்டில்... துளியும் மேக்கப் போடாமல் அழகில் மயக்கும் பிரியங்கா மோகன்! கியூட் போட்டோ ஷூட்!
 

Tap to resize

மலையாளத்தில் , பல முன்னணி நடிகர்கள் படங்களில் காமெடி வேடத்தில் நடித்துள்ள பக்ரு... தமிழில் , நடிகர் ஜீவா - சந்தியா நடிப்பில் வெளியான 'டிஷ்யூம்' படத்தில், அறிமுகமானார். ஸ்டாண்ட் கலைஞர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில், குழந்தைகளுக்கு டூப் போடும் கலைஞராக நடித்திருந்தார்.

இந்நிலையில் இவர் கடந்த 2006ஆம் ஆண்டு காயத்ரி மோகன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு தீப்தா கீர்த்தி எங்கிற 14 வயது மகள் உள்ள நிலையில், இரண்டாவது பெண் குழந்தைக்கு தந்தையாகியுள்ளார். தற்போது இது குறித்த புகைப்படம் ஒன்று வெளியாக, ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள். கடைசி பட இயக்குனரை தேர்வு செய்த ரஜினிகாந்த்! கமுக்கமாக கொடுக்கப்பட்ட அட்வான்ஸ்? சீக்ரெட் காக்க இது தான் காரணமா

Latest Videos

click me!