இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே இந்த திரைப்படத்தில் நடித்து வரும் கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்பை அவர் வெளியிட்டு வரும் நிலையில், அதில் ஒளிந்திருக்கும் ஒரு ஒற்றுமை குறித்த பதிவை இப்போது பார்க்கலாம். இந்த திரைப்படத்தில் "தயால்" என்கின்ற கதாபாத்திரத்தில், பிரபல மலையாள திரைப்பட நடிகர் சௌபின் ஷாகிர் நடித்து வருகிறார். ஆனால் கடந்த 1991ம் ஆண்டு வெளியான ரஜினிகாந்தின் தர்மதுரை என்கின்ற திரைப்படம், அதற்கு அடுத்த ஆண்டே ஹிந்தியில் "தியாகி" என்கின்ற பெயரில் எடுக்கப்பட்டது. அப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பெயர் "தயால்" என்பது குறிப்பிடத்தக்கது.