சினிமாவில் 40 ஆண்டுகளை கடந்த மீனா... ரஜினிகாந்த் மற்றும் 80ஸ் நட்சத்திரங்கள் இணைந்து கொண்டாடிய பிரம்மாண்ட விழா

Published : Mar 06, 2023, 12:13 PM IST

சினிமாவில் சக்சஸ்புல் நாயகியாக வலம் வரும்ம் மீனா, தற்போது நடிகையாக 40 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை பிரம்மாண்டமாக விழாவாக கொண்டாடி உள்ளனர். 

PREV
18
சினிமாவில் 40 ஆண்டுகளை கடந்த மீனா... ரஜினிகாந்த் மற்றும் 80ஸ் நட்சத்திரங்கள் இணைந்து கொண்டாடிய பிரம்மாண்ட விழா

நடிகை மீனா கடந்த 1982-ம் ஆண்டு சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான நெஞ்சங்கள் என்கிற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இதையடுத்து ஏராளமான படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அவருக்கு அடையாளம் தந்த படம் ‘அன்புள்ள ரஜினிகாந்த்’. இப்படத்தில் ரஜினி அங்கிள் என சூப்பர்ஸ்டார் மீது அலாதி பிரியம் கொண்ட குட்டி ரசிகையாகவே நடித்து அசத்தி இருந்தார் மீனா.

28

இப்படி குழந்தை நட்சத்திரமாக கலக்கிய மீனாவை சினிமாவில் ஹீரோயினாக அறிமுகப்படுத்தியது ராஜ்கிரண் தான். அவரின் என் ராசாவின் மனசிலே என்கிற திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தார் மீனா. கஸ்தூரி ராஜா இயக்கத்தில் வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

38

இதன்பின் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக கொடிகட்டிப் பறந்த மீனா, எஜமான், வீரா, முத்து போன்ற படங்களில் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த மூன்று படங்களுமே பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதற்கு மீனா - ரஜினி இடையேயான கெமிஸ்ட்ரியும் முக்கிய காரணமாக இருந்தது.

இதையும் படியுங்கள்... கண்கள் நீயே... காற்றும் நீயே..! செல்ல மகளுடன் முதன்முறையாக போட்டோஷூட் நடத்திய ஸ்ரேயா - வைரல் கிளிக்ஸ் இதோ

48

இவ்வாறு சினிமாவில் சக்சஸ்புல் நாயகியாக வலம் வந்துகொண்டிருக்கும் மீனா, தற்போது சினிமாவில் 40 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதனை தற்போது விழாவாக கொண்டாடி உள்ளனர். மீனா 40 என்கிற பெயரில் தனியார் நிறுவனம் நடத்திய இந்நிகழ்ச்சியில் ஏராளமான பிரபலங்களும் கலந்துகொண்டனர்.

58

குறிப்பாக இதில் நடிகை மீனாவின் பேவரைட் ஹீரோவான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும் கலந்துகொண்டு அவருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

68

அதுமட்டுமின்றி 80 மற்றும் 90ஸில் கலக்கிய நடிகை மீனாவின் சமகால நடிகைகளான ராதிகா, தேவையானி, ரோஜா, சினேகா, சங்கவி ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர்.

78

மேலும் நடிகர்கள் சரத்குமார், ஜீவா, ராஜ்கிரண் இயக்குனர்கள் கே.எஸ்.ரவிக்குமார், கே.பாக்யராஜ் உள்பட ஏராளமானோர் மீனா 40 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடிகை மீனாவுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். நடிகர் ரஜினிகாந்த் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் மீனா 40 நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது எடுத்த புகைப்படம் இது.

88

மீனா 40 நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்துடன் நடிகை ரோஜா உரையாடியபோது எடுத்த கேண்டிட் கிளிக் இது.

இதையும் படியுங்கள்... ஷூட்டிங்கில் விபத்து.. நடிகர் அமிதாப் பச்சனுக்கு எலும்பு உடைந்ததால் பதறிப்போன படக்குழு- படப்பிடிப்பு நிறுத்தம்

Read more Photos on
click me!

Recommended Stories