விக்ரம் :
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசனின் ஆக்ஷன் கலந்த 'விக்ரம்' திரைப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ.160 கோடிக்கு மேல் வசூலித்து, ஒட்டுமொத்தமாக உலகம் முழுவதும் சுமார் ரூ.400 கோடிகளை வசூலித்துள்ளது. ஃபஹத் பாசில், விஜய் சேதுபதி, சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் பாக்ஸ் ஆபிஸில் பல சாதனைகளை முறியடித்துள்ளது.
இதற்கிடையில், 'விக்ரம்' படத்தின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் வாங்கியுள்ளதாகவும், சாட்டிலைட் உரிமையை ஸ்டார் விஜய் சேனல் பெற்றுள்ளதாக தெரிகிறது. சமீபத்திய தகவல்களின்படி, படம் ஜூலை 8 ஆம் தேதி OTT இல் அறிமுகமாகும். ஆனால் அதிகாரப்பூர்வ அப்டேட் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இப்படம் பிளாட்பாரத்தில் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்