தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித், பைக் ரேஸ், கார் ரேஸ் மீது அதீத ஆர்வம் கொண்டவராக இருந்து வருகிறார். பெரும்பாலும் இவர் நடிக்கும் படங்களில் இடம்பெறும் பைக் அல்லது கார் ஸ்டண்ட் காட்சிகளை டூப் போடாமல் அசால்டாக செய்து அசத்துவதில் வல்லவராகவும் இருந்து வருகிறார் அஜித்.