சூப்பர் ஸ்டாரின் தந்தையை பார்த்துள்ளீர்களா? வைரலாகும் ரஜினியின் ஓல்ட் போட்டோ!

Kanmani P   | Asianet News
Published : May 16, 2022, 04:21 PM IST

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவரது தந்தியுடன் அமர்ந்திருக்கும் அன்சீன் போட்டோஸ் வைரலாகி வருகிறது.

PREV
14
சூப்பர் ஸ்டாரின் தந்தையை பார்த்துள்ளீர்களா? வைரலாகும் ரஜினியின் ஓல்ட் போட்டோ!
rajinikanth

70 களில் துவங்கிய சினிமா பயணத்தை இன்று யாரும் எட்டமுடியாத இமலைய உயரத்திற்கு கொண்டு சென்றவிட்டார் ரஜினி.  வில்லன், செகண்ட் ஹீரோ, ஹீரோ என படிப்படியாக வளர்ந்து இன்று சூப்பர் ஸ்டாராக உயர்ந்துள்ளார். அபூர்வ ராகங்களில் துவங்கி இன்று 169-ல் அடி எடுத்து வைத்துள்ளார் ரஜினி. 

24
rajinikanth

சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளியான அண்ணாத்தே ரசிகர்களை ஈர்த்திருந்தது. 90 கள் ரஜினியை கண்ணில் காட்டிய இந்த படத்தை சிவா இயக்கி இருந்தார். தங்கை சென்டிமென்டில் மெய் சிலிர்க்க வைத்திருந்தார் ரஜினி. இதையடுத்து தற்போது பீஸ்ட் படத்தை இயக்கிய நெல்சன் இயக்கவுள்ளார். அனிருத் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

34
rajinikanth

இதற்கிடையே மகள் ஐஸ்வர்யா- தனுஷ் விவகாரத்து காரணமாக மனா உளைச்சலில் இருந் ரஜினி வெளியில் வருவதை தவிர்த்து வருகிறார். அதோடு இவருக்கு உடல் நிலையம் மோசமடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து சிகிச்சைக்காக மகளுடன் அமெரிக்கா சென்றுள்ளார் ரஜினி.   சிகிச்சைக்கு பிறகு தலைவர் 169 சூட்டிங் துவங்கும் என தெரிகிறது. 

44
rajinikanth

இந்நிலையில் ரஜினியின் ஓல்ட் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் ரஜினி அவரது தந்தை ரானோ ஜிராவுடன் இருக்கிறார். சினிமாவிற்குள் அறிமுகமான பிறகு அவரது தந்தையை சந்தித்த போது எடுத்த படம் என தெரிகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories