திண்டுக்கல்லில் மட்டும் ரிலீஸ் ஆகாத "தர்பார்"... கொல காண்டில் ரஜினி ரசிகர்கள்... நடுரோட்டில் அமர்ந்து போராட்டம்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Jan 09, 2020, 07:06 AM ISTUpdated : Jan 09, 2020, 07:13 AM IST
திண்டுக்கல்லில் மட்டும் ரிலீஸ் ஆகாத "தர்பார்"... கொல காண்டில் ரஜினி ரசிகர்கள்... நடுரோட்டில் அமர்ந்து போராட்டம்...!

சுருக்கம்

திண்டுக்கல்லில் மட்டும் "தர்பார்" படம் ரிலீஸ் செய்யப்படவில்லை. விநியோகஸ்தர் பிரச்சனை காரணமாக "தர்பார்" படம் ரிலீஸ் ஆகவில்லை எனக்கூறப்படுகிறது. இதையறிந்த ரஜினி ரசிகர்கள் நேற்று இரவிலிருந்தே கொல காண்டில் சாலைகளில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.   

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த "தர்பார்" திரைப்படம் பொங்கல் விருந்தாக இன்று வெளியாகியுள்ளது.  சூப்பர் ஸ்டார் ஆதித்யா அருணாச்சலம் என்ற காவல் துறை அதிகாரியாக  நடித்துள்ள இந்த படத்தில் நயன்தாரா அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். 

உலகம் முழுவதும் 7 ஆயிரம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ள "தர்பார்" படத்தின் பர்ஸ்ட் டே, பர்ஸ்ட் ஷோவைக் காண ரசிகர்கள் நேற்று இரவு முதலே ஆர்வமாக காத்திருக்கின்றனர். தியேட்டர் வாசல்களில் தோரணம், பிரம்மாண்ட கட்அவுட், பேனர்கள் என ரஜினி ரசிகர்கள் செம்ம மாஸ் காட்டி வருகின்றனர். மேலும் பல தியேட்டர்களில் பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் "தர்பார்" பட ரிலீஸை கொண்டாடி வருகின்றனர். 

இந்நிலையில், திண்டுக்கல்லில் மட்டும் "தர்பார்" படம் ரிலீஸ் செய்யப்படவில்லை. விநியோகஸ்தர் பிரச்சனை காரணமாக "தர்பார்" படம் ரிலீஸ் ஆகவில்லை எனக்கூறப்படுகிறது. இதையறிந்த ரஜினி ரசிகர்கள் நேற்று இரவிலிருந்தே கொல காண்டில் சாலைகளில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

’ஆதித்யா அருணாச்சலத்தை பார்த்தாகவும்’, ’வேண்டும், வேண்டும், தர்பார் வேண்டும்’ போன்ற கோஷங்களை எழுப்பிய படி போராட்டத்தில் ஈடுபட்டனர். விநியோகஸ்தர்கள் பிரச்சனைக்காக ரசிகர்கள் பாதிக்கப்படுவதாகவும், FDFS காட்சியை திண்டுக்கல்லில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

ஒரு பக்கம் சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகர்கள் நள்ளிரவிலும் நடுரோட்டில் அமர்ந்து போராடி வரும் சமயத்தில்,  #DarbarinDindigul என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. அந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தியும் லைகா, ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோருக்கு கோரிக்கைகள் பறந்துள்ளன. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ரசிகரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் சூரி; ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்தது என்ன?
ரோகிணிக்குள் நுழைந்த ஆவி - அதிர்ச்சியில் மனோஜ்! 'சிறகடிக்க ஆசை' சீரியல் லேட்டஸ்ட் அப்டேட்!