அதிரடி சரவெடி !! வெளியானது சூப்பர் ஸ்டார் ரஜினியின் தர்பார் ! கொண்டாடும் ரசிகர்கள் !!

Selvanayagam P   | others
Published : Jan 09, 2020, 06:42 AM IST
அதிரடி சரவெடி !! வெளியானது சூப்பர் ஸ்டார் ரஜினியின்  தர்பார் ! கொண்டாடும்  ரசிகர்கள் !!

சுருக்கம்

ரஜினிகாந்த் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியிள்ள தர்பார் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் 7000 திரையரகுகளில் ரிலீஸ் ஆகியுள்ளது. அதிகால் 4 மணிக்கே படம் வெளியிடப்பட்டதால் ரசிகர்கள் பொண்டாடி வருகின்றனர்.  

சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த்தின் 'தர்பார்' படம் இன்று வெளியானதையொட்டி சென்னையில்  தியேட்டர்களில் ரசிகர்கள் குவிந்தனர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா நடித்த, 'தர்பார்' படம், இன்று  அதிகாலை 4 மணிக்கே வெளியானது.

இந்தியாவில் மட்டும், 4,000 தியேட்டர்களில், 'தர்பார் ' படம் வெளியாகிறது. பொங்கல் பண்டிகைக்கு, ஒரு வாரம் முன்னதாகவே வெளியாகும், 'தர்பார்' படத்திற்கு, நான்கு நாள் சிறப்பு காட்சிக்கு, அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி 9, 10, 13, 14ம் தேதிகளில், சிறப்பு காட்சிகள் திரையிட, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

சென்னையில் அதிகாலை காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதால் நள்ளிரவு முதலே ரசிகர்கள் தியேட்டர்கள் முன்பு திரண்டன்ர். ரஜினியின் சிறிய ரக கட் – அவுட்களுக்கு ரசிகர்கள் பாலபிஷேகம் செய்தனர். மேலும் தீபாராதணை காட்டியும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்,

சென்னை மட்டுமல்லாமல் மதுரை,  திருச்சி, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் வெளியிடப்பட்டுள்ளதால் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அறந்தாங்கி நிஷாவின் பிரமிக்க வைக்கும் மாற்றம்: அழகுடன் ஆரோக்கியமும்; 50 நாட்களில் நடந்த ஆச்சரியம்!
ரிஸ்க் எடுத்து நடிச்ச படம்; 2025ல் வசூலில் நம்பர் இடம் பிடித்த குட் பேட் அக்லீ: பாக்ஸ் ஆபீஸ் அப்டேட் ரிப்போர்ட்!