ஆட்டத்தைத் தொடங்கிய பாஜகவினர் !! தீபிகாவுக்கு குடைச்சல் கொடுக்க முடிவு !!

By Selvanayagam PFirst Published Jan 8, 2020, 10:51 PM IST
Highlights

டெல்லி ஜே.என்.யு மாணவர்களுக்கு நேரில் ஆதரவு தெரிவித்த  பிரபல நடிகை தீபிகா படுகோன் நடித்து வெளிவர உள்ள 'சப்பாக் 'படத்தைப் புறக்கணிக்க வேண்டும் என  பாஜக , ஆர்.எஸ்.எஸ் தரப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் ஆசிரியர் சங்கம் சார்பில் வி ஒன்று நடைபெற்றது. இதில் இடது சாரி மாணவர் சங்க மாணவர்கள் பங்கேற்றனர், மேலும் அந்த மாணவர்கள்  கடந்த சில நாட்களாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் கடந்த 5ஆம் தேதி முகமூடி அணிந்துவந்த, அடையாளம் தெரியாத நபர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினர். இந்த கொலைவெறி தாக்குதலில் ஜே.என்.யு மாணவர் சங்கத் தலைவர் ஆய்ஷா கோஷ் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த கொலைவெறி தாக்குதலுக்கு வலதுசாரியைச் சேர்ந்த , மாணவர் அமைப்பான ஏபிவிபி இந்த தாக்குதலின் பின்னணியில் இருப்பதாக இடதுசாரி மாணவர் அமைப்புகள் கூறுகின்றன. ஆனால் வலதுசாரி மாணவர்கள் தங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகவும், இடது சாரியைச் சேர்ந்த மாணவர்கள் தான் தங்களைத் தாக்கியுள்ளதாகவும் கூறியுள்ளனர். இவ்விவகாரத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படாத நிலையில் காவல்துறை தொடர்ந்து விசாரித்து வருகிறது.

இந்நிலையில் கொலைவெறி கும்பலால் தாக்கப்பட்ட மாணவர்களை பாலிவுட் நடிகை தீபிகா படுகோன். நேரில் சந்தித்து தனது ஆதரவைத் தெரிவித்தார் ஜே.என்.யு பல்கலைக்கழகத்துக்குத் தென்மேற்கு கேட் வழியாக வந்து, போராட்டம் நடத்திய மாணவர்களுடன் நின்று தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். பின்னர் மாணவர்கள் சங்கத்தைச் சேர்ந்த சிலரிடம் மட்டும் பேசிவிட்டு ,பதினைந்து நிமிடங்களில் அங்கிருந்து சென்றுவிட்டார்.

இதுவரை பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் சந்தித்து ஆதரவு தெரிவித்து இருப்பது ,வரவேற்பையும் எதிர்ப்பையும் பெற்று வருகிறது. இந்நிலையில் அவர் நடித்து வெளியாக உள்ள "சப்பாக் " திரைப்படத்தைப் பாரதிய ஜனதா கட்சி பிரமுகர்கள் சிலர் புறக்கணிக்குமாறு சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

 

இதனால் #boycottchhapaak என்ற ஹேஷ்டேக் டிரெண்டானது. அதேசமயத்தில் #IsupportDeepika என்ற ஹேஷ்டேக்கையும் தீபிகா ஃபேன்ஸ் பதிவிட்டு வருகின்றனர்.

நான் எதற்கும்  பயப்படவில்லை , போராட்டத்தில் எங்கள் குரலைத் தைரியமாக வெளிப்படுத்த முடிகிறது என்று கூறியுள்ள தீபிகா , எங்களின் பார்வை என்னவாக இருந்தாலும் ,நாங்கள் மக்களின் நலனுக்காகத் தெருவில் இறங்கிப் போராடுவோம். மேலும் என்னைப் போன்ற மற்ற பிரபலங்களும் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் அதிரடியாக கூறியுள்ளார்.

click me!