நகையை அடமானம் வச்சு வங்கி லோன் வாங்குவோம் – கதிருக்கு சப்போர்ட்டுக்கு வந்த ராஜீ: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2!

Published : Jul 11, 2025, 05:04 PM ISTUpdated : Jul 11, 2025, 06:04 PM IST

raji supports kathir in pandian stores 2 : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கதில் டிராவல்ஸ் தொடங்க வங்கி லோனுக்கு முயற்சி செய்யும் நிலையில், அதற்கு ஆதரவாக இருக்க ராஜீயும் முடிவு செய்துள்ளார்.

PREV
15
நீங்க நல்ல அப்பாவே கிடையாது - செந்தில்

raji supports kathir in pandian stores 2 : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் செந்திலுக்கு அரசு வேலை கிடைத்த நிலையில் அடுத்ததாக கதிர் சொந்தமாக பிஸினஸ் செய்ய முயற்சி செய்து வருகிறார். ஏற்கனவே மீனா நான் வங்கி லோனுக்கு ஏற்பாடு செய்து கொடுக்கிறேன் என்று வாக்குறுதி அளித்திருந்தார். தொடர்ந்து கதிரும் தன் பங்கிற்கு எல்லா முயற்சிகளும் செய்திருந்த நிலையில் டிராவல்ஸ் தொடங்குவதற்கான எல்லா ஆவணங்களையும் எடுத்துக் கொண்டு வங்கிக்கு சென்றார். அவருடன் ராஜீயும் சென்றிருந்தார். அதில் ஒரு சின்ன விஷயம் ராஜீ வங்கிக்கு செல்லும் போது கண்ணன் திருடிச் சென்ற நகைகளை போலீஸ் மீட்டுக் கொடுத்த நிலையில் அதனை எடுத்துக் கொண்டு சென்றார்.

25
பாண்டியன் ஸ்டோர்ச் 2 சீரியல் இன்றைய எபிசோடு

ஆனால், வங்கியில் சூரிட்டி கேட்க, கதிர் மற்றும் ராஜீயிடம் கொடுப்பதற்கு எதுவும் இல்லை. அவர்களுக்காக யாரும் முன்வரவும் மாட்டார்கள். இந்த சூழலில் ராஜீ தான் நகையை வைக்க முன் வர அதனை கதிர் வேண்டாம் என்று சொல்லிவிட்டார். மேலும் அந்த நகையை பழனிவேல் மாமாவிடம் கொடுத்து ராஜியின் வீட்டில் கொடுக்க சொல்லிவிட்டார். அதோடு அவர்களது காட்சி முடிந்தது.

35
மீனாவிற்கு ஆதரவாக வந்த செந்தில்

அதன் பிறகு செந்தில் மற்றும் மீனா தொடர்பான காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில், செந்தில் ரூ.10 லட்சம் கொடுத்து வேலை வாங்கிய உண்மையையும், தன்னால், தனது அப்பாவிற்கு நேர இருந்த அவமானத்தையும் காப்பாற்றியது மீனா கொண்டு வந்த ரூ.10 லட்சம் தான். அவள் தான் அலுவலகத்தில் வங்கி லோனுக்கு ஏற்பாடு செய்து அதனை உங்களிடம் கொண்டு வந்து கொடுத்தார்.

45
கதிருக்கு ஆதரவாக வந்த ராஜீ

ஆனால், அதைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நானும் பணத்திற்காக எல்லா இடங்களிலும் முயற்சி செய்தேன். எங்கும் கிடைக்கவில்லை. யார் யாரிடமோ கேட்டேன். கடைசியில் ஏமாற்றம் தான் மிஞ்சியது. உங்களிடம் சொல்ல வந்த போது தான் மீனா பத்து லட்சம் பணத்தை கொண்டு வந்து கொடுத்தாள். நான் பணத்தை கொண்டு சென்று மீனாவின் அப்பாவிடம் கொடுத்து இந்த வேலையை வாங்கினேன்.

55
அரசு வேலைக்கு முயற்சி செய்ய நீங்கதான் காரணம்

நான் மீனாவின் அப்பா சொல்கிறார் என்பதற்கெல்லாம் இந்த அரசு வேலையை வாங்கவில்லை. உங்களுடைய டார்ச்சர், தொல்லை தாங்க முடியாமல் தான் இந்த அரசு வேலையை வாங்கினேன் என்று எல்லா உண்மையையும் வெளிப்படையாகவே சொல்லிவிட்டார். கடைசியில் இதற்கு அவரது அம்மாவிடமிருந்து ஒரு அறை தான் கிடைத்தது. மேலும், பாண்டியன் மற்றும் செந்திலுக்கு இடையில் கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. இறுதியில் செந்தில், பாண்டியனைப் பார்த்து நீங்க எல்லாம் ஒரு நல்ல அப்பாவே கிடையாது என்று சொல்லிவிட்டார்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories