வெள்ளை நிற கவுனில்... ஏஞ்சல் நயன்தாராவுக்கே டஃப் கொடுக்கும் 'ராஜா ராணி 2' வில்லி அர்ச்சனா! ஸ்டன்னிங் போட்டோஸ்!

Published : Jul 31, 2021, 05:40 PM IST

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், 'ராஜா ராணி 2 ' சீரியலில்... சந்தியாவை பழிவாங்குவதற்காக புதுசு புதுசா பல திட்டங்களை போட்டு அதில் தோற்றுகொண்டே இருக்கும், வில்லி அர்ச்சனா கிறிஸ்டியன் வெட்டிங் டிரஸ் அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படம் பிகில் நயன்தாராவுக்கே டஃப் கொடுக்கும் விதத்தில் உள்ளது. 

PREV
17
வெள்ளை நிற கவுனில்... ஏஞ்சல் நயன்தாராவுக்கே டஃப் கொடுக்கும் 'ராஜா ராணி 2' வில்லி அர்ச்சனா! ஸ்டன்னிங் போட்டோஸ்!
archana

ஏற்கனவே கடந்த சில வருடங்களுக்கு முன், இந்தியில் இருந்து டப்பிங் செய்து ஒளிபரப்பாகி வந்த 'என் கணவன் என் தோழன்' என்கிற சீரியல் ரீமேக் செய்யப்பட்டு தற்போது 'ராஜா ராணி 2 ' என ஒளிபரப்பாகி வருகிறது.

 

27
archana

இதில் ஆல்யா மானசாவுடன் கலர்ஸ் தமிழ் சேனலில் திருமணம் என்ற சீரியலில் நடித்த நடிகர் சித்து நடித்துவருகிறார்.

37
archana

சிறு வயதில் இருந்தே ஐபிஎஸ் அதிகாரியாக மாற வேண்டும் என்கிற கனவில் வளர்கின்ற நாயகி, சூழ்நிலை காரணமாக படிக்காத ஒருவரை திருமணம் செய்ய நேரிடுகிறது. குடும்பத்தினரை சமாளித்து தன்னுடைய கனவை எப்படி நிஜமாக்குகிறார் நாயகி என்பதை பல்வேறு எதிர்பாராத திருப்பங்களுடன் எடுக்கப்பட்டு வரும் சீரியல் 'ராஜா ராணி 2 '.

 

47
archana

இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், இந்த சீரியலில் வில்லியாக நடித்து பிரபலமானவர் விஜே அர்ச்சனா.

57
archana

சந்தியா படித்தவர், வசதியான குடும்பத்தை சேர்த்தவர், என்பதால் எப்படியாவது அவரை மாமியார் வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என பல்வேறு திட்டத்தை போட்டு ஒவ்வொரு முறையும் தோற்று வருகிறார். வில்லியாக மட்டும் இல்லாமல் இவரது நடிப்பு சில சமயங்களில் காமெடியாவும் இருக்கும்.

67
archana

நடிப்பை தாண்டி விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், காமெடி நிகழ்ச்சி ஒன்றிலும் கலந்து கொண்டு அசத்தி வருகிறார். 

77
archana

தற்போது பிகில் பட ஏஞ்சல் நயன்தாராவுக்கே டஃப் கொடுக்கும் விதத்தில் வெள்ளை நிற வெட்டிங் டிரஸ் அணிந்து எடுத்து கொண்ட புகைப்படம் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது. 

click me!

Recommended Stories