விஜய் தொலைக்காட்சி புது ட்ரெண்ட்களை செட் செய்யும் பல சீரியல்கள், நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது. வேலைக்காரப் பெண்ணுக்கும், கோடீஸ்வர முதலாளிக்கும் இடையேயான காதல், மோதல் பிரச்சனைகளுடன் எடுக்கப்பட்ட ‘ராஜா ராணி’ சீரியல் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது.
இந்த சீரியலில் மூலம் மலர்ந்த காதலால் நாயகனாக நடித்த சஞ்சீவ், நாயகி ஆல்யா மானசா இருவரும் செல்லமகளுடன் ஹேப்பி தம்பதியாக வாழ்ந்து வருகின்றனர். தற்போது இந்த சீரியலின் இரண்டாம் பாகம் முற்றிலும் வேறுபட்ட கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது.
ராஜா ராணி சீசன் 2 சீரியல் தற்போது விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஆல்யா மானசாவுடன் கலர்ஸ் தமிழ் சேனலில் திருமணம் என்ற சீரியலில் நடித்த நடிகர் சித்து நடித்துவருகிறார். ரசிகர்களின் வரவேற்பை அடுத்து தற்போது இந்த சீரியலின் ஒளிபரப்பு நேரம் 1 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஹிந்தியில் ஒளிபரப்பாகி வெற்றி பெற்ற "என் கணவன் என் தோழன்" என்ற சீரியலின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும். இதில் ஆல்யா மானசாவின் மாமியார் கதாபாத்திரத்தில் பிரவீனா நடித்து வருகிறார்.
பிரவீனா சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த புகைப்படத்தின் மூலமாக இவர் பிரபல நடிகை ஒருவரின் நெருங்கிய உறவினர் என்பது தெரியவந்துள்ளது.
கமல், ரஜினி என 80ஸ் களில் டாப் ஹீரோக்களுடன் பிசியாக நடித்தவர் ஸ்ரீவித்யா. மறைந்த நடிகை ஸ்ரீவித்யா தன்னுடைய அத்தை என்பதை குறிப்பிட்டு அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தான் பிரவீனா சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.