அந்த வகையில் தற்போது, கீர்த்தி சுரேஷ் தனக்கு பிடித்த ஒருவரை கட்டி பிடித்து, முத்தம் கொடுத்து Hug டே ஸ்பெஷலாக வெளியிட்டுள்ள புகைப்படம் சிங்கிள்ஸை செம்ம கடுப்பாக்கியுள்ளது.
நடிகை கீர்த்தி சுரேஷ் கைவசம் அரை டஜன் படங்கள் உள்ளன. இவர் நடித்து முடித்துள்ள 'குட்லக் சகி' மற்றும் , 'மரைக்கார்' ஆகிய படங்களின் படப்பிடிப்பு முழுமையாக முடிக்கப்பட்ட நிலையில், இன்னும் ரிலீஸ் ஆகாமல் உள்ளது.
மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் 'அண்ணாத்த' படத்தில் நடித்து வந்த போதுதான், படக்குழுவினர் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு படக்குழுவினர் அனைவரும் மீண்டும், சென்னைக்கே திரும்பினார்.
இந்த படத்தை தொடர்ந்து, செல்வராகவன் நடிகராக அறிமுகமாகியுள்ள 'சாணி காகிதம்', தெலுங்கில் 'ராங் தீ', உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
ஷூட்டிங் இல்லாத நாட்களில், குடும்பத்தினருடனும் தன்னுடைய செல்ல நாயுடனும் செலவிடுவதை வழக்கமாக வைத்திருக்கும் கீர்த்தி, தற்போது... ஹூக் டே கூட தன்னுடைய நாய் குட்டியுடன் தான் கொண்டாடியுள்ளார்.
ஷூட்டிங் இல்லாத நாட்களில், குடும்பத்தினருடனும் தன்னுடைய செல்ல நாயுடனும் செலவிடுவதை வழக்கமாக வைத்திருக்கும் கீர்த்தி, தற்போது... ஹூக் டே கூட தன்னுடைய நாய் குட்டியுடன் தான் கொண்டாடியுள்ளார்.
தன்னுடைய செல்லத்தை கட்டி அணைத்து, முத்தமிட்டபடி இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து, இளம் ரசிகர்கள் பலர்... குமுறி வருகிறார்கள். அந்த புகைப்படம் இதோ...